Asianet News TamilAsianet News Tamil

OnePlus பிரியர்களுக்கு சிறிய ஏமாற்றம்!

அண்மையில் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில், அதைத் தொடர்ந்து 11 சீரிஸில் மற்ற ஸ்மார்ட்போன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது

OnePlus is not bringing OnePlus 11 Pro and OnePlus 11T, check details here
Author
First Published Feb 13, 2023, 10:36 AM IST

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியா உள்ளிட்ட உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 பிராசசர் இருப்பது அந்த போனில் சிறப்பாகும். அதன்பிறகு, ஒன்பிளஸ் இந்திய சந்தைக்கு மிட்-ரேஞ்சர் OnePlus 11R ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

ஒன்பிளஸ் 7 சீரிஸ் மாடல் வெளிவந்ததில் இருந்து, அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அதன் ஃபிளாக்ஷிப் போன்களுக்கு அடுத்தபடியாக 'ப்ரோ' மாடலை அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் இந்த முறை OnePlus 11 சீரிஸில் அதே போல் ப்ரோ மாடல் வருமா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். இந்த ஆண்டு OnePlus 11 Pro அல்லது OnePlus 11T ஸ்மார்ட்போன் இருக்காது என்பதை ஒன்பிளஸ் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..

இது தொடர்பாக ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி என்ற தளத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் தரப்பில் கூறுகையில், பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை முறைப்படுத்துவதற்காக OnePlus 11T கொண்டு வரப்படாது என்ற வகையில் தெரிவித்துள்ளது. அதன்படி,  ‘இந்த 2023 ஆண்டு முதல் வட அமெரிக்காவில் (மற்றும் உலகளவில்) சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் எங்கள் ப்ரோ என்ற மாடலை அகற்றுகிறோம், ஏனெனில், ஏற்கெனவே ப்ரோ வேரியண்டில் உள்ள அத்தனை அம்சங்களுமே  இதில் அடங்குவதால், தனியாக ப்ரோ மாடல் என்று கொண்டு வரவேண்டிய தேவை ஏற்படவில்லை." என்று ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி தளத்தில் ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும், 2023 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் நிறுவனத்திடமிருந்து வேறு ஏதாவது ஃபிளாக்ஷிப் போன் வருமா வராதா என்பது குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. OnePlus ஆனது 'T' மாடலைத் தவிர வேறு ஏதாவது உள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை

ChatGPT சொன்னதை கேட்டு சமையல் ரெசிபி செய்த நெட்டிசன்! விளைவு!!

இதற்கிடையில், அண்மையில் அறிமுகமான OnePlus 11 5G ஸ்மார்ட்போனானது ப்ரீ ஆர்டர்களுக்கு தயாராக உள்ளது. ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ₹ 56,999. ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுடன் வாங்குபவர்கள் ₹ 1,000 தள்ளுபடியைப் பெறலாம். ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் QHD+ Samsung LTPO 3.0 AMOLED டிஸ்ப்ளே உள்ளது. ஃபோனின் திரையானது 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 740 GPU குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 ஆக்டா கோர் பிராசசர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios