பட்ஜெட் விலை.... பிரீமியம் அம்சங்கள்... புது ஒன்பிளஸ் இயர்போன் அறிமுகம்..!

ஒன்பிளஸ் இயர்பட்ஸ் மாடலில் அதிகபட்சமாக 102 டெசிபல் வரையிலான சவுண்ட் பிரெஷரை வெளிப்படுத்தும் திறன் வழங்கப்பட்டு உள்ளது. 

OnePlus Bullets Wireless Z2 launched in India

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடலுடன் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 நெக்பேண்ட் இயர்போன் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 நெக்பேண்ட் மாடலில் 12.4mm டிரைவர்கள் வலழங்கப்பட்டு இருக்கின்றன. ஒன்பிளஸ் ஆடியோ சாசதனங்களில் இத்தகைய டிரைவர்கள் வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்:

புதிய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 மாடலில் பிரத்யேக AI சீன் மாடல் அல்காரிதம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்போனில் உள்ள இன்-பில்ட் மைக்ரோபோன் பயன்படுத்தி கால் நாய்ஸ் லெவல்களை மாற்றி அமைக்கிறது. இந்த இயர்பட்ஸ் IP55 தர சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் ஹைட்ரோபோபிக் நானோ கோட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஏ.ஏ.சி. கோடெக் சப்போர்ட்:

ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 மாடலில் சிலிகான் கொண்டு உருவாக்கப்பட்ட நெக்பேண்ட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் வெர்ஷன் 5 கனெக்டிவிட்டி மற்றும் ஏ.ஏ.சி., எஸ்.பி.சி. கோடெக் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் இயர்பட்ஸ் மாடலில் அதிகபட்சமாக 102 டெசிபல் வரையிலான சவுண்ட் பிரெஷரை வெளிப்படுத்தும் திறன் வழங்கப்பட்டு உள்ளது. 

OnePlus Bullets Wireless Z2 launched in India

முந்தைய புல்லட்ஸ் வயர்லெஸ் Z மற்றும் புல்லட்ஸ் வயர்லெஸ் Z பேஸ் எடிஷன் மாடல்களை போன்றே, ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 மாடலும் இயர்போன்களை பிரித்ததும், ஒன்பிளஸ் போன் மாடலுடன் இணைந்து கொள்ளும். ஒன்பிளஸ் அல்லாத மற்ற நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களில் இந்த அம்சம் இயங்காது. இதனால் ஒன்பிளஸ் தவிர்த்து வேறு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் ப்ளூடூத் பேரிங் மூலம் தானாக இணைப்பை செயல்படுத்த வேண்டும்.

பேட்டரி பேக்கப்:

புதிய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 மாடலில் 200mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தாலே அதிகபட்சமாக 20 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடிடியும். 

ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 மாடல் பீம் புளூ மற்றும் மேஜிகோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios