Asianet News TamilAsianet News Tamil

சாம்சங்கிற்கு போட்டியாக அறிமுகமாகும் OnePlus 11 5G.. எதிர்பார்க்கப்படும் விலை, சிறப்பம்சங்கள் இதோ!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய OnePlus 11 5G ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. இது சாம்சங்கிற்கு போட்டியாக அமையுமா, இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

OnePlus 11 5G to be available for pre-order in India on February 7: Check expected price, specs here
Author
First Published Feb 4, 2023, 12:54 PM IST

பிரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் நிறுவனம் உள்ளது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், அதற்கு போட்டியாக இருக்கும் வகையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் 11 ஸ்மார்ட்போனும் களம் இறங்குகிறது. 

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகம் ஆகிறது. இது ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் அறிமுகமாகும் அதே நாளில் அமேசானில் முன்பதிவு ஆர்டர்களும் வரவேற்கப்படுகிறது. இது குறித்து அமேசானில் ஒரு டீஸர் படத்தையும் வெளியிட்டுள்ளது, இது வரவிருக்கும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் ப்ரீ ஆர்டர் இருப்பதைஉறுதிப்படுத்துகிறது.

சாம்சங்கை பொறுத்தவரையில் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ராவை ரூ. 1 லட்சத்திற்கும் மேலாக அறிமுகப்படுத்தியது. அதை ஒன்பிளஸ் நிறுவனம் வெளிப்படையாக கேலி செய்துள்ளது. ஒன்பிளஸ் தனது புதிய OnePlus 11 5G போனை மலிவு விலையில் வழங்குவதாக பயனர்களுக்கு உறுதியளித்துள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி அதன் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், அபிஷேக் யாதவ் என்ற டெக் பிரியர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், OnePlus 11 5G விலை ரூ.60,000-க்குள் இருக்கும் என்று கூறியுள்ளார். 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 61,999 ஆக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samsung Galaxy S23 அறிமுகமான நிலையில், S22 ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு!

OnePlus 11 ஆனது நான்கு வருட முக்கிய ஆண்ட்ராய்டு OS அப்டேட்டுகள், ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்டுகளை பெறும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அதன் OnePlus 11 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிவித்துள்ளதால், அதே அம்சங்கள் தான் இந்திய மாடலிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சீனாவில் வெளியான OnePlus 11 5ஜி ஸ்மார்ட்போனில் வழக்கமான 6.7-இன்ச் QHD+ E4 OLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், HDR 10+, LTPO 3.0 வசதி,  நிலையான பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, சற்று வித்தியாசமான பின்புற பேனல் டிசைன் ஆகியவை உள்ளன. இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC பிராசசர் எதிர்பார்க்கப்படுகிறது. இது செயல்திறன் மிக்க பிராசசர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios