Asianet News TamilAsianet News Tamil

120Hz டிஸ்ப்ளே, டிமென்சிட்டி 9000 பிராசஸருடன் உருவாகும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

OnePlus 10R with Dimensity 9000, 120Hz AMOLED display said to launch in Q2 2022
Author
Tamilnádu, First Published Jan 24, 2022, 5:59 PM IST

ஒன்பிளஸ் நிறுவனம் தனது 10 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. சில தினங்களுக்கு முன் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 9RT ஸ்மார்ட்போனினை ஒன்பிளஸ் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனினை வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

அதன் படி ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஃபிளாக்‌ஷிப் டிமென்சிட்டி 9000 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஒப்போ, விவோ, சியோமி மற்றும் ஹானர் பிராண்டுகள் இதே பிராசஸர் கொண்ட தங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கின்றன. 

எனினும், இதுபற்றி ஒன்பிளஸ் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஒருவேளை அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போன் 120Hz AMOLED ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இதன் கேமரா அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இதில் ஹேசில்பிலாடு கேமரா அம்சங்கள் வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

OnePlus 10R with Dimensity 9000, 120Hz AMOLED display said to launch in Q2 2022

தற்போதைய தகவல்களின்படி ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு இறுதியில் அதாவது மே அல்லது ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சீன சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

இதுதவிர ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலின் சர்வதேச வெளியீடு இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு துவக்கத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இது ஒன்பிளஸ் 9 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். முன்னதாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 9RT ஸ்மார்ட்போன் 6.64 இன்ச் FHD+ ஃபுளூயிட் AMOLED இ4 டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருந்தது.

இத்துடன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 888 ஜென்1 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 16MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4500mAh பேட்டரி, 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios