ரிவர்ஸ் மோடில் 90Kmph வேகம்... பதறிய வாடிக்கையாளர்கள்... மீண்டும் சர்ச்சையில் சிக்கியா ஓலா..!

மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் உள்ளதை போன்றே ஓலா S1 ப்ரோ மாடலிலும் ரிவர்ஸ் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது.

Ola S1 Pro Electric Scooter Affected Reverse Mode Accelerator Glitch, Sudden Shutdowns for Some Users

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஏற்பட்ட மென்பொருள் குறைுபாடு காரணமாக சில ஸ்கூட்டர்களில் அக்செல்லரேட்டர் சீரற்ற நிலையில் இயங்குகிறது. இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த மிக மோசமான அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். 

அதன்படி ஸ்கூட்டரில் ரிவர்ஸ் மோட் தானாக ஆன் ஆகி, மிக அதிக வேகத்தில் செல்கிறது. முன்னதாக சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரங்கேறியது. தீ விபத்து பற்றி விசாரணை நடத்துவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமும் கூறியது. இந்த நிலையில், சில ஓலா S1 ப்ரோ வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்து சிறிது தூரம் சென்றதும் அவை ஷட்-டவுன் ஆகி விடுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

வீடியோ:

ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்டு இருக்கும் புது பிரச்சினை குறித்து டுவிட்டரில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் ஓலா S1 ப்ரோ மாடல் தரையில் படுக்க வைக்கப்பட்டு இருக்கிறது. அப்போது திடீரென ஸ்கூட்டரில் ரிவர்ஸ் மோட் ஆன் ஆகி, மிக அதிக வேகத்தில் சக்கரம் சுழல ஆரம்பித்து விடுகிறது. இந்த வேகம் ரிவர்ஸ் மோடில் மிகவும் ஆபத்தான ஒன்று ஆகும்.  இந்த பிரச்சினை குறித்து ஓலா எலெக்ட்ரிக் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

எனினும், இது மென்பொருள் குறைபாடு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இதனை அப்டேட் மூலம் சரி செய்து விட முடியும் என்றும் கூறப்படுகிறது. மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் உள்ளதை போன்றே ஓலா S1 ப்ரோ மாடலிலும் ரிவர்ஸ் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் மிக எளிதாக ஸ்கூட்டரை பார்க் செய்து விட முடியும். 

ரிவர்ஸ் மோட் ஸ்பீடு:

ரிவர்ஸ் மோடில் செல்ல ஒவ்வொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களும் குறிப்பிட்ட வேகத்தில் மட்டும் ஸ்கூட்டர் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். இதன் மூலம் ரிவர்ஸ் மோடில் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க முடியும். 

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் ரிவர்ஸ் மோடில் மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் அதன் வேகத்தை கட்டுப்படுத்தி இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரிவர்ஸ் மோடில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios