ஸ்கூட்டர்களை ரகசியமாக அப்டேட் செய்யும் ஓலா எலெக்ட்ரிக்.... ஏன் தெரியுமா...?
மார்ச் 2022-க்கு முன் வினியோகம் செய்யப்பட்ட மாடல்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே மேம்பட்ட VCU-க்களை வழங்க துவங்கி விட்டது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு VCU (வெஹிகில் கண்ட்ரோல் யூனிட்) கொண்டு அப்டேட் செய்து வருகிறகது. அதன்படி அப்டேட் செய்யப்படும் மாடல்களில் அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக உருவாகும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மேம்பட்ட VCU-க்கள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு செய்யும் போது ஸ்கூட்டரில் ஹீட்டிங் பிரச்சினைகள் வராது.
பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஆன்போர்டு VCU-க்களை வழங்கி வருகிறது. சமீப காலங்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ரிவர்ஸ் மோட் பிரச்சினை மற்றும் தீ விபத்து சம்பவங்களில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக ஸ்கூட்டர்களை பரிசோதனை செய்ய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 1,441 யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருந்தது.
முக்கிய அப்டேட்:
பிரபல டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விரைவில் ஏற்கனவே விற்பனை செய்த S1 ப்ரோ ஸ்கூட்டர்களை ரிகால் செய்து VCU அப்டேட் வழங்கலாம் என தெரிவித்து இறுக்கிறார். மார்ச் 2022-க்கு முன் வினியோகம் செய்யப்பட்ட மாடல்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே மேம்பட்ட VCU-க்களை வழங்க துவங்கி விட்டது. பழைய VCU-க்களில் போதுமான ரேம் மற்றும் மெமரி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகனத்தில் மிகமுக்கிய பாகங்களில் ஒன்றாக VCU-க்கள் உள்ளன. இவை டார்க் ஒருங்கிணைப்பு, ஆபரேஷன் மற்றும் கியர் ஷிப்ட் நுனுக்கங்கள் மற்றும் ஹை வோல்டேஜ் மற்றும் 48 வோல்ட் ஒருங்கிணைப்பு, சார்ஜிங் கண்ட்ரோல், ஆன்போர்டு டிக்னாசிஸ், மாணிட்டரிங் மற்றும் தெர்மல் மேனேஜ்மண்ட் போன்ற பணிகளை கவனித்துக் கொள்கிறது.
பேட்டரி செல்கள் மற்றும் பேட்டரி பேக் ஆரோக்கியத்தை ஓலா எலெக்ட்ரிக் தொடர்ச்சியாக கவனித்து வருகிறது. VCU யூனிட்களின் தெர்மல் மேனேஜ்மண்ட் பேட்டரி செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கும். இந்த நிலையில், VCU அப்டேட் மூலம் பல்வேறு பிரச்சினைகளை ஓலா எலெக்ட்ரிக் எதிர்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.