விரைவில் நத்திங் போன் 1 முன்பதிவு... இணையத்தில் வெளியான சூப்பர் அப்டேட்..!
நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நத்திங் போன் 1 மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன் ஜூலை 12 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நாளில் சர்வதேச சந்தையிலும் நத்திங் போன் 1 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வு இந்தியாவில் இரவு 8.30 மணிக்கு துவங்க இருக்கிறது. புதிய நத்திங் போன் 1 மாடல் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கிறது. மேலும் 45 வாட் பாஸ்ட் சார்ஜர் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய நத்திங் போன் 1 மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதன்படி இதன் விலையை பெருமளவு குறைக்க முடியும். இந்த வரிசையில், நத்திங் போன் 1 மாடலின் முன்பதிவு விவரங்கள் வெளியாகி உள்ளது. இதனை டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டு உள்ளார்.
அதன் படி ப்ளிப்கார்ட் தளத்தில் நத்திங் போன் 1 மாடலை முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் இடம்பெற்று உள்ளன. நத்திங் போன் 1 மாடல் பல்வேறு மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் நத்திங் போன் 1 மாடலை ரூ. 2 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். போன் வெளியீட்டை தொடர்ந்து விற்பனையின் போது, இந்க கட்டணம் போனின் விலையுடன் குறைக்கப்பட்டு விடும்.
நத்திங் போன் 1 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.55 இன்ச் FHD+ OLED பேனல், 2400x1080 பிக்சல் ரெசல்யூஷன்
- 90Hz ரிப்ரெஷ் ரேட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்
- அட்ரினோ GPU
- 4500 ய 5000 mAh பேட்டரி
- 45 வாட் வயர்டு / வயர்லெஸ் சார்ஜிங் வசதி
- 8GB ரேம், 128GB இண்டர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த நத்திங் ஓ.எஸ்.
- டூயல் 50MP பிரைமரி கேமரா
- 32MP செல்பி கேமரா