CMF from NOTHING : பிரபல NOTHING நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் Gadgets பிராண்ட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒரு ஸ்மார்ட் வாட்ச், போன் மற்றும் ஏர் பட்ஸ் வெளியாகவுள்ளது.

CMF நிறுவனத்தின் "வாட்ச் ப்ரோ 2", CMF ஃபோன் 1 மற்றும் CMF பட்ஸ் ப்ரோ 2 ஆகியவற்றுடன் நாளை ஜூலை 8ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. பிரபல நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்ட் தான் இந்த CMF என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவில் நாளை வெளியாகவுள்ள CMF வாட்ச் ப்ரோ 2 குறித்த தகவல்களை காணலாம்.

CMF வாட்ச் ப்ரோ 2, மாற்றக்கூடிய மேற்புறத்தை கொண்டிருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணங்களில், அல்லது தோற்றங்களில் இந்த புதியஸ் வாட்சின் Bezelsகளை மாற்றிக்கொள்ளலாம். இதுகுறித்த ஒரு விளக்கப்படத்தையும் அந்நிறுவனம் தனது பிராண்ட் அம்பாசிடரான ராஷ்மிக்காவை வைத்து வெளியிட்டுள்ளது. 

ரூ.10 ஆயிரத்திற்குள் லேப்டாப்.. ஹெச்பி குரோம்புக் வாங்க அருமையான சான்ஸ்.. எப்படி வாங்குவது?

அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் தலத்தில் வெளியான அந்த படத்தில், CMF வாட்ச் ப்ரோ 2, ஆரஞ்சு வண்ணப் பட்டையுடன் வட்ட டயல் போல காட்சியளிக்கிறது. ஆனால் சில இடங்களில் அதே வாட்ச் சதுர வடிவிலான டைல் கொண்ட வாட்சை போலவும் காட்சியளிக்கிறது. ஆகவே இந்த புதிய வாட்ச் பல்வேறு வடிவங்களில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

CMF வாட்ச் ப்ரோ 2 ஆனது ஒரு அலுமினிய அலாய் கட்டமைப்பைக் கொண்டிருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு Watch Facesகளை ஆதரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே அறிமுகமான CMF வாட்ச் ப்ரோவை விட இந்த வாட்ச் சில மேம்படுத்தல்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Scroll to load tweet…

இதன் விலை ரூ. 4,499 இருக்கும் என்றும், இதில் 1.96-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 58Hz Refresh Rate உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. உடற்பயிற்சி தேவையான சுமார் 110க்கும் அதிகமான ஸ்போர்ட் மோட்களை இந்த வாட்ச் ஆதரிக்கும். மேலும் இந்த வாட்ச் IP68 ரேட்டிங்குடன் உருவப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சமாகும்.

பூமியைப் பதம் பார்க்க வரும் ஆபத்து... 65,000 கி.மீ. வேகத்தில் மோத வரும் கோள்! நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!