எப்பவும் போல தான் வேலை நடந்திட்டு இருக்கு... இன்னும் நிறைய மாறப் போகுது.. ட்விட்டர் சி.இ.ஓ. அதிரடி!
ட்விட்டர் நிறுவனம் எப்படியும் கைமாறுகிறது, இன்னும் ஏன் தலைமை செயல் அதிகாரி மாற்றங்களை செய்யப் போகிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் தனது குழுவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் பற்றி தனது ட்விட்டரில் தகவல் தெரிவித்து இருக்கிறார். மேலும் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது பற்றியும் விளக்கம் அளித்து இருக்கிறார்.
முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இரண்டு மூத்த நிர்வாக அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து பராக் அகர்வால் ட்விட்டரில் புது பதிவுகளை போட்டு இருக்கிறார். இதுதவிர ட்விட்டரில் உள்ள போலி அக்கவுண்ட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் வரை ட்விட்டரை விலைக்கு வாங்கும் முடிவு கிடப்பில் போடப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
“ட்விட்டர் நிறுவனம் எப்படியும் கைமாறுகிறது, இன்னும் ஏன் தலைமை செயல் அதிகாரி மாற்றங்களை செய்யப் போகிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்,” என பராக் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தயார் நிலை:
“சுருக்கமாக சொல்லப் போனால் விடை மிகவும் எளிமையான ஒன்று தான்: விரைவில் நிறுவனம் கைமாறுவதற்கான பரிவர்த்தனைகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கிறேன், அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும், இந்த காலக்கட்டத்தில் ட்விட்டருக்கு எது சரியோ அதனை நிச்சயம் செய்ய வேண்டும். ட்விட்டரை நிர்வகிப்பது மற்றும் அதனை முன் இருந்து வழிநடத்துவதிற்கு நான் தான் பொறுப்பு, ட்விட்டரை ஒவ்வொரு நாளும் மிக உறுதியான தளமாக மாற்றுவதே எங்களின் பணி.”
“வெறுமனே நிறுவனத்தை இயக்குவதற்காக ட்விட்டரில் யாரும் பணி செய்யவில்லை. எதிர்கால நிறுவனத்தின் உரிமையாளர் பற்றி எந்த கவலையும் இல்லை. எங்களின் பணி மீது நாங்கள் பெருமை கொள்கிறோம். பயனர்கள், கூட்டாளிகள், பங்கு தாரர்கள் மற்றும் அனைவருக்காகவும் ட்விட்டர் தளத்தினை சிறந்த பிராடக்ட் மற்றும் வியாபாரமாக மேம்படுத்தவே நாங்கள் இங்கு இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
முக்கிய முடிவு:
“தற்போதைய சூழ்நிலையை காரணம் காட்டி மிக முக்கிய முடிவுகளை எடுக்க ஒருபோதும் தயக்கம் காட்ட மாட்டோம். மக்கள் கேட்கின்றனர்: இப்போது ஏன் கட்டணத்தை நிர்வகிக்கின்றீர்கள் - மிக நெருக்கத்தில்? நமது துறை அதிக போட்டிகள் நிறைந்த சூழல்களால் நிரம்பியுள்ளது. இந்த பரிவர்த்தனையை காரணமாக கொண்டு நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமான மிக முக்கிய முடிவுகளை எடுக்க நானோ அல்லது ட்விட்டரில் எந்த தலைவரும் தயங்க மாட்டோம். பணியை தொடர்ந்து செய்வதில் கவனம் கொண்டுள்ளோம். ஒவ்வொரு மாற்றமும் சிறப்பான முடிவுகளை நிச்சயம் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.”
“இதனால் நான் முன்னேறி செல்வதில் நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? நான் இன்னும் எனது பணியை மிகுந்த கவனமாக செய்வதில் தீர்க்கமாக இருக்கிறேன். இதில் தேவைப்பட்டால் மிக கடுமையான முடிவுகளை எடுப்பதும் அடங்கும். நம் சேவை மற்றும் வியாபாரத்தில் உள்ள ஆழமான பிரச்சினைகளை தீர்க்க ஆர்வமாக உள்ளேன். சிறப்பான முடிவுகளுக்காக மேலும் அதிக மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்.”
வெளிப்படைத் தன்மை:
“நாங்கள் செய்யும் பணி குறித்து மேலும் அதிக வெளிப்படைத் தன்மையை கொண்டு வர முயற்சித்து வருகிறோம். இனி டாபிக்ஸ் ஆப் தி டே தலைப்பில் எனது ட்விட்களை பார்க்க முடியாது. மேலும் அதிக சத்தமான சவுண்ட் பைட்-ஐ எதிர்பார்க்க முடியாது. தற்போது நடைபெறும், தொடர்ச்சியான சவால் மிக்க பணியை எங்களது குழுவினர் ட்விட்டரில் நடைபெறும் பொது கருத்து பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்தும்.”
“இறுதியாக- ட்விட்டரின் ஒட்டுமொத்த குழுவின் மேல் மிகுந்த நன்றி. அவர்கள் எப்போதும் உறுதியாகவும், கவனமாகவும், கூட்டு முயற்சிக்கு ஆதரவாரவும் இருந்துள்ளனர். அவர்கள் எப்போதும் போல் மிக சிறப்பான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்,”என பராக் அகர்வால் தொடர்ச்சியான ட்விட்களில் தெரிவித்து இருக்கிறார்.