கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன நோக்கியா G21- என்னென்ன அம்சங்கள் தெரியுமா?
நோக்கியா G21 ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா G21 ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியானது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோக்கியா G20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
முன்னதாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC சான்றளிக்கும் வலைதளம் மற்றும் ரஷ்ய நாட்டு விற்பனையாளர் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது. தற்போது கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா G21 ரேம், சிப்செட் போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.
கீக்பென்ச் விவரங்களின் படி நோக்கியா G21 மாடலில் ஆக்டா கோர் யுனிசாக் T606 ARM சிப்செட், 4GB ரேம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கீக்பென்ச் பரிசோதனையில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 312 புள்ளிகளையும், மல்டி கோரில் 1157 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.
முந்தைய தகவல்களின் படி நோக்கியா G21 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட HD+ டிஸ்ப்ளே, 128GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5050mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜி எல்.டி.இ., வை-பை, ப்ளூடூத், என்.எஃப்.சி. மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது கேமரா, 2MP மூன்றாவது கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.