ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான பலன்களுடன் புது நோக்கியா போன் அறிமுகம்...!
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோக்கியா C சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா C21 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ஆகும். புதிய நோக்கியா C21 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+V நாட்ச் ஸ்கிரீன், யுனிசாக் Sc9863A பிராசஸர், அதிகபட்சம் 4ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: விரைவில் வெளியாகும் ரெனோ 8 சீரிஸ்.... அசத்தல் டீசர் வெளியிட்ட ஒப்போ...!
புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் நார்டிக் டிசைன், பின்புறம் கைரேகை சென்சார், 5050mAh பேட்டரி மற்றும் மூன்று நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
இதையும் படியுங்கள்: ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் அசத்தல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா?
நோக்கியா C21 பிளஸ் அம்சங்கள்:
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ V-நாட்ச் 20:9 டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் SC9863A பிராசஸர்
- IMG8322 GPU
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13MP ஆட்டோபோக்கஸ் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 2 MP டெப்த் சென்சார்
- 5MP செல்பி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
- 5050mAh பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
இதையும் படியுங்கள்: வாய்ஸ் கண்ட்ரோல் வசதியுடன் டேபில் ஃபேன் அறிமுகம்... சியோமி அதிரடி...!
விலை மற்றும் விற்பனை விவரம்:
நோக்கியா C21 பிளஸ் ஸ்மார்ட்போன் டார்க் சியான் மற்றும் வாம் கிரே என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 299 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 299 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்Hனை நோக்கியா மற்றும் முன்னணி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
நோக்கியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா வயர்டு இயர்பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜியோ வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி மற்றும் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது.