Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் புது நோக்கியா ஃபீச்சர் போன்கள் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

இரு மாடல்களிலும் எப்.எம். ரேடியோ, அதிகபட்சம் 2 ஆயிரம் காண்டாக்ட் மற்றும் 500 எஸ்.எம்.எஸ். வசதி, எல்.இ.டி. டார்ச்லைட் மற்றும் பில்ட் இன் கேம்களை கொண்டிருக்கிறது. 

 

Nokia 105 (2022) and Nokia 105 Plus launched in India
Author
India, First Published Apr 26, 2022, 5:19 PM IST

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 105 மற்றும் நோக்கியா 105 பிளஸ் 2ஜி ஃபீச்சர் போன் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய 105 மாடல் 2019 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 105 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இரு மாடல்களும் காம்பேக்ட் கிளாசிக் நார்டிக் டிசைன் மற்றும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் எக்ஸ்டீரியர் ஃபினிஷ் கொண்டுள்ளது.

இரு மாடல்களிலும் எப்.எம். ரேடியோ, அதிகபட்சம் 2 ஆயிரம் காண்டாக்ட் மற்றும் 500 எஸ்.எம்.எஸ். வசதி, எல்.இ.டி. டார்ச்லைட் மற்றும் பில்ட் இன் கேம்களை கொண்டிருக்கிறது. நோக்கியா 105 பிளஸ் மாடலில் ஆட்டோ கால் ரெக்கார்டிங்  அம்சம் உள்ளது. இதில் அதிகபட்சம் 32GB மைக்ரோ எஸ்.டி. கார்டு சப்போர்ட், மியூசிக் பிளேயர், 1000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Nokia 105 (2022) and Nokia 105 Plus launched in India

புதிய நோக்கியா 105 மற்றும் நோக்கியா 105 பிளஸ் அம்சங்கள்:

- 1.77 இன்த் QQVGA டிஸ்ப்ளே
- 4MB ரேம்
- 4MB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- S30 பிளஸ் ஓ.எஸ்.
- 800mAh பேட்டரி
- 3.5mm ஆடியோ ஜாக்
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 2ஜி கனெக்டிவிட்டி
- பில்ட்-இன் டார்ச்
- கிளாசிக் கேம் வசதி
- சார்கோல் மற்றும் புளூ நிறங்கள்
- 1000mAh பேட்டரி (நோக்கியா 105 பிளஸ்)

விலை விவரங்கள்:

நோக்கியா 105 (2022) மாடல் சார்கோல் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 105 பிளஸ் மாடல் சார்கோல் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இரு ஃபீச்சர் போன் மாடல்களும் நோக்கியா வலைதளம், ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விரைவில் துவங்க இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios