"இனி பழைய போன்களில் வாட்ஸ் - அப் கிடையாது" - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

no whatsapp-in-old-phones


பழைய ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் செயல்பாடு நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆன்ட்ராய்ட் 2.2 பிரோயோ, பழைய ஆன்ட்ராய்ட் போன்கள், ஐபோன் 3 ஜிஎஸ், குறைந்த வெர்சன் கொண்ட 7 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல விண்டோஸ் 7 வெர்சன் ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ ஆன்ட்ராய்ட் 2.2 மற்றும் அதற்கு குறைவான வெர்சன்கள், ஆப்பிள் 3ஜிஎஸ், 2.6 வெர்சன், வின்டோஸ்7 ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் புதிய நவீன,மேம்படுத்தப்பட்ட மாடல் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலியை இயக்கலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அனைத்து பிளாக்பெரி மொபைல்போன்கள், சில நோக்கியமா போன்களில் இந்த ஆண்டு ஜூன்மாதம் 30-ந்தேதி வரை மட்டுமேவாட்ஸ்அப் இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. பிளாக்பெரி ஓ.எஸ்., பிளாக்பெரி-10, நோக்கியோ எஸ்.40, நோக்கியா சிம்பியன் எஸ்60 ஆகியவை ஜூன் 30 வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios