பிரக்யான் ரோவர் நிலவில் தேசியச் சின்னத்தை தெளிவாகப் பதிவு செய்யவில்லை: இஸ்ரோ தகவல்

வெற்றிகரமாக முடிந்த சந்திரயான்-3 திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் வலம் வந்தபோது அதன் சக்கரத்தில் இருந்த இந்தியாவின் தேசியச் சின்னம் தெளிவாகப் பதிவு செய்யப்படவில்லை.

No clear national emblem, Isro logo imprints show lunar soil lumpy sgb

வெற்றிகரமாக முடிந்த சந்திரயான்-3 திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் வலம் வந்தபோது அதன் சக்கரத்தில் இருந்த இந்தியாவின் தேசியச் சின்னம் தெளிவாகப் பதிவு செய்யப்படவில்லை.

சந்திரயான்-3 பிரக்யான் ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னமும் இஸ்ரோவின் லோகாவும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ரோவர் நிலவில் தரையிறங்கி உலா வரும்போது இவ்விரண்டு சின்னங்களையும் தரையில் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு சின்னங்களும் நிலவின் மேற்பரப்பில் தெளிவான முத்திரையாகப் பதிவு செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து விளக்கும் இஸ்ரோ தலைவர், ரோவர் சின்னங்களைப் பதிக்க முடியவில்லை என்பது ஒரு நல்ல அறிகுறி தான் என்றும் தென் துருவப் பகுதியில் நிலவு மண்ணின் பண்புகள் பற்றிய புரிதலுக்கு உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

AI அம்சங்களுடன் புதிய வீடியோ எடிட்டிங் ஆப்! அசத்தலான வசதிகளுடன் யூடியூப் கிரியேட் அறிமுகம்!

No clear national emblem, Isro logo imprints show lunar soil lumpy sgb

சந்திரயான்-3 சேகரித்துள்ள நிலவின் தென் துருவப் பகுதி மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள், நிலவில் நீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் பல ஆய்வுப் பணிகளுக்கும் இந்தத் தகவல்கள் அடிப்படையாக இருக்கும். நிலவில் மனிதர்கள் நீடித்து வாழ்வதற்கான சாத்தியக்கூறு குறித்த ஆய்வுகளுக்கும் இது முக்கியமானதாக இருக்கும்.

"இது ஒரு புதிய புரிதலைக் கொடுத்துள்ளது. நிலவின் மண் வேறுபட்டது என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். ஆனால் அதை வேறுபடுத்துவது எது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் தூசி நிறைந்ததாக இல்லை, மாறாக, கட்டியாப உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஏதோ ஒன்று அங்கிருக்கும் மண்ணை பிணைத்துள்ளது. அது என்ன என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்” என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் சொல்கிறார்.

அதே சமயத்தில், “...ரோவர் நகர்ந்து சென்ற இடங்களில் பாதைத் தடங்கள் உருவாகியிருப்பதை நாம் மிகத் தெளிவாகக் காணமுடிகிறது. தரையிறங்கிய இடத்தின் அருகிலும் ரோவர் இயங்கிய இடங்களிலும் ரோவரின் சக்கரம் சென்ற தட்டதைப் பார்க்கிறோம். இது நிலவில் லேண்டர் சக்கரங்கள் பதியும் அளவுக்கு தளர்வான மண் இருப்பதை உணர்த்துகிறது" என்று இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநர் அனில் பரத்வாஜ் தெரிவிக்கிறார்.

ரோவரின் பின்புறச் சக்கரங்களில் பொறிக்கப்பட்ட தேசியச் சின்னமும் இஸ்ரோ லோகோவும் இஸ்ரோ செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை நிறுவனத்தால் (ISAT) உருவாக்கப்பட்டவை.

எதுவும் செய்யத் துணிந்த ஐபோன் பிரியர்கள்! மும்பை ஆப்பிள் ஸ்டோரில் மணிக்கணக்கில் அலைமோதிய கூட்டம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios