கூகிள் நிறுவனத்தை முந்த நினைக்கும் இந்திய சிறுவனின் நிறுவனம் :14 வயது ஹர்ஷவர்தன் சாதனை ..!
கூகிள் நிறுவனத்தை முந்த நினைக்கும் இந்திய சிறுவனின் நிறுவனம் :14 வயது ஹர்ஷவர்தன் சாதனை ..!
கன்னிவெடி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் விதமாக , ட்ரோன் என்ற ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளான், குஜராத்தை சேர்ந்த 14 வயதான ஹர்ஷவர்தன் என்ற சிறுவன். இந்த ட்ரோன் கண்டுபிடிப்பை குஜராத் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது அந்த மாணவனை வெகுவாக பாராட்டி அங்கீகரித்துள்ளது.
ட்ரோன் அம்சத்தின் பயன்பாடு :
போரின் போது , நிலத்தில் கன்னிவெடிகளை மறைத்து வைத்து, வெடிக்க செய்து போர் வீரர்களை வீழ்த்துகின்றனர். இதனை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே கன்னிவெடிகளை கண்டுபிடிக்கும் ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சிறுவன் ஹர்சவர்தன் கருத்து:
தான் சிறு வயதிலிருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்ததாவும், அதே சமயத்தில் போரின் போது கன்னிவெடி வெடித்து உயிரிழந்ததை, வீடியோவாக பார்த்துள்ளதாகவும், அதன் எண்ணமே தற்போது இவ்வாறு உருவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஹர்ஷவர்தன், ‘ஏரோபோட்டிக்’ என்ற நிறுவனத்தை தொடங்கி தான் கண்டுபிடித்துள்ள ட்ரோனுக்கான காப்புரிமை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த நிறுவனத்தில் வெளிநாட்டினர் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
ட்ரோன் விலை : 2 to 5 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் வளர்ச்சி : ஆப்பிள் கூகிள் உள்ளிட்ட பெரிய நிறுவனத்தை விட தன் நிறுவனத்தை உயர்த்த ஆசை என தெரிவித்துள்ளார் ஹர்ஷவர்தன்