முன்பதிவு தொடக்கம்... விரைவில் இந்தியா வரும் புது யமஹா MT15...!

புதிய நிறங்கள் மட்டுமின்றி யமஹா MT15 வெர்ஷன் 2.0 மாடலில் மேலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாம். 

New Yamaha MT-15 India Launch Teased Bookings Open

யமஹா நிறுவனத்தின் MT15 வெர்ஷன் 2.0 மோட்டார்சைக்கிள் மாடல் விரைவில் இந்திய சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கான டீசரை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த யமஹா விற்பனையாளர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். இதுதவிர நாட்டின் பல்வேறு யமஹா விற்பனையாளர்களும் புதிய MT15 வெர்ஷன் 2.0 மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளன. 

புதிய யமஹா MT15 வெர்ஷன் 2.0 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் விற்பனையாளர் மற்றும் மோட்டார்சைக்கிள் நிறத்திற்கு ஏற்ப வேறுபடும். புதிய யமஹா MT15 மாடல் கிரே, வைட், கிளாசி பிளாக் மற்றும் ரேசிங் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. புதிய நிறங்கள் மட்டுமின்றி யமஹா MT15 வெர்ஷன் 2.0 மாடலில் மேலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாம். 

முக்கிய அப்டேட்கள்:

மேம்பட்ட ஸ்டிரீட் நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடலில் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட USD முன்புற ஃபோர்க்குளை கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய யமஹா MT15 வெர்ஷன் 2.0 குவிக் ஷிஃப்டர் வசதியை பெறும் என தெரிகிறது. இத்துடன் முற்றிலும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

New Yamaha MT-15 India Launch Teased Bookings Open

இதை கொண்டு புதிய MT15 பயனர்கள் யமஹா வை கனெக்ட் செயலியை கொண்டு இணைத்துக் கொள்ளலாம். பின் ரியல் டைம் டேட்டா மற்றும் இதர விவரங்களை ஸ்மார்ட்போனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேம்பட்ட MT15 வெர்ஷன் 2.0 மாடலில் R15 V4 மாடலில் வழங்கப்பட்ட என்ஜினே வழங்கப்படும் என தெரிகிறது. 

என்ஜின் விவரங்கள்:

புதிய எண்ட்ரி லெவல் சூப்பர்  ஸ்போர்ட் மாடலில் 155சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் VVA தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அப்-குயிக் ஷிஃப்டர் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. செயல்திறன் அளவுகள் புதிய மாடலில் மாற்றம் செய்யப்படாது என்றே தெரிகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios