new maruthi alto 800

பிரபல கார் நிறுவனமான மாருதி , அதனுடைய எந்த மாடல் காரும் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில், புதிய பல பாதுகாப்பு அம்சங்களுடனும், பார்க்கும் போதே கண்ணை கவரும் விதமாக புதிய பொலிவுடன் வெளிவருகிறது மாருதி ஆல்டோ 800

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைப்பெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ-வில் தனது புதிய மாடல் ஆல்டோ800-ஐ அறிமுகப்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது .

இந்த கார் ஏற்கனவே , தற்போது மக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் ரெனால்ட் க்விட் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது .

சிறப்பம்சங்கள் :

ஆல்டோ 800-ல் மீடியா என்ஏவி இன்போடெயின்மென்ட் ஆடியோ சிஸ்டம் வைக்கப் பட்டுள்ளது .இந்த காரை பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்

மற்ற சிறப்பம்சங்கள் :

ஏபிஎஸ் எனப்படும் பிரேக்கிங் சிஸ்டம்,

இரண்டு உயிர் காக்கும் ஏர் பேக்

குறிப்பாக இரண்டு கதவுகள் மட்டுமே இந்த காரில் இடம்பெற்றிருக்கும்.இந்த காரை பொறுத்தவரையில் 4 பேர் பயணம் செய்ய முடியும்

ஏற்கனவே மாருதி ஆல்டோ 800, மக்களிடேயே நல்ல வரவேற்பில் உள்ளபோது, இந்த கார் மக்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது