உங்க போனில் பிரச்சனையா ..? சரி செய்ய வந்துவிட்டது “ புது செயலி”..!
எதற்கும் ஆப்ஸ், எங்கும் ஆப்ஸ் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது .பண பரிவர்த்தனை மேற்கொள்வதிலிருந்து, நம் ஆடை நமக்கு எந்த அளவிற்கு பொருத்தமாக உள்ளது என்பதை துல்லியமாக தெரிவிக்கும் அளவிற்கு புது புது ஆப்ஸ் வந்துக் கொண்டே இருக்கிறது.
அந்த வரிசையில் தற்போது, நம் மொபைல் போனில் எதாவது பழுது ஏற்பட்டால் , அதனை மிக சுலபமாக சரி செய்ய முடியும் . அதற்காகவே பிரத்யேக ஒரு செயலி வடிவமைக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
அதாவது , “System repair for Android 2017” அப்ளிகேசனை டவுன்லோடு செய்யுங்கள். இந்த அப்ளிகேஷன் மூலம் ஸ்கேன் செய்யும் போது, ஆண்ட்ராய்டு செயலியில் இருக்கும் பிரச்சனைகள் சரி செய்யப்படும். இதன் காரணமாகத்தான் கடந்த 3 மாத காலத்தில் மட்டும் அதிக அளவில் இந்த ஆப்ஸ் டவுன் லோட் செய்யப் பட்டுள்ளது