வரி செலுத்த, பான் கார்டு பெற "புதிய ஆப் "......
டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஏற்ப தற்போது, புதிய ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளது வருமான வரித்துறை . இதன் மூலம் மிக சுலபமாக வரி செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
e-KYC அங்கீகாரம்
ஆதார் எண் சார்ந்து e-KYC அங்கீகாரத்தை பயன்படுத்தி, சில நிமிடங்களிலேயே வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. . இதன் மூலம் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் பெறுவது மிகவும் சுலபம்
ஒப்புதல் :
இந்த புதிய ஆப் உருவாக்க உருவாக்குவதற்கான திட்டங்கள் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்றபின் துவங்கப்படும் என வருமான வரித்துறையை தெரிவித்துள்ளது
கணக்கு சரி பார்க்க முடியும்
வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் பெற e-KYC அங்கீகார வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும் அனைத்து தகவல்களையும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது