இன்பர்மேஷன் :ரயில் டிக்கெட் புக்பண்ண  “IRCTC புது ஆப்” 10ஆம் தேதி அறிமுகம்..! மறக்காம டவுன் லோட் பண்ணிக்கோங்க..!!

ரயில் பயணம்  விரும்பாதவர்கள்  யாரும் இல்லை. ரயில் பயணத்தை விட  சிறந்த பயணம்  வேறு ஏதும் இல்லை

தொலை தூர பயணத்திற்கு  மிகவும் ஏற்றது  ரயில்  பயணம்  தான் .  வசதி படைத்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை   அனைவரும் பயன்படுத்திகொள்ளும்  ஒரு  வசதி  எதுவென்றால்  அது  ரயில் தான்...

விழாக்காலங்கள் :

விழாக்காலங்களில்  தாங்கள்  சொந்த  ஊர்களுக்கு  செல்வதற்காகவும்,  பொதுவாக  ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களும்  முன்பதிவு  செய்து  பயணித்து  வருகின்றனர். இந்நிலையில் , பொதுமக்களுக்கு   ஏதுவாக  சுலபமான  முறையில்   ரயில்  டிக்கட்டை  முன்பதிவு செய்வதற்கு  தற்போது ஒரு புதிய மொபைல் ஆப்பை மத்திய  ரயில்வே  துறை வெளியிட   உள்ளது.

புது  ஆப் அறிமுகம் :

வரும்  1௦  ஆம் தேதி , “IRCTC புது ஆப்” வெளியிட  போவதாக  ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த  ஆப்ஸ்  பயன்படுத்துவதற்கு மிக சுலபமாக இருக்கும்,. அட்வான்ஸ்ட் தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த  ஆப்ஸ் , கடைசியாக  பதிவு செய்த  பயணசீட்டு  விவரத்தை  கூட காண்பிக்கும் இதன்  மூலம்   நமக்கு தேவையான அனைத்து  விவரங்களையும் எளிதில் இந்த  ஆப் மூலம் பெற முடியும்.

அதாவது,  ரயில்  டிக்கட்  முன்பதிவு செய்வது  இனி மிக  மிக  எளிது என்பது குறிப்பிடத்தக்கது

 .