Asianet News TamilAsianet News Tamil

Netflix பாஸ்வேர்டை இனி பகிர முடியாது!

நெட்ஃபிக்ஸ் நிறுவனம் பாஸ்வேர்டை பகிரும் அம்சத்தை விரைவில் நிறுத்த உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 

Netflix to soon end password sharing, says company's new co-CEO Greg Peters
Author
First Published Jan 23, 2023, 10:45 PM IST

நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் புதிய இணை-தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கிரெக் பீட்டர்ஸ். இவர் மார்ச் மாத இறுதிக்குள் நெட்ஃபிக்ஸ் பாஸ்வேர்டை நண்பர்களிடம் பகிரும் அம்சத்தை நிறுத்துவதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். பாஸ்வேர்டை இலவசமாக பகிரும் அம்சமும் இருக்காது.  அதாவது, இதன் பிறகு நீங்கள் உங்களுடைய நெட்ஃபிக்ஸ் கணக்கை நண்பர்களிடம் பகிர்ந்தால், அதற்கு தனியாக பகிர்வு கட்டணம் என்று விதிக்கப்படும். 

இந்த புதிய திட்டம் சோதனை முறையில் சில இடங்களில் கொண்டு வரப்பட்டு, பிறகு உலகளாவிய அளவில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து நெட்ஃபிக்ஸ் தரப்பில் கூறுகையில், ஒரே நேரத்தில் ஒரேடியாக இந்த மாற்றத்தை கொண்டு வரமுடியாது. சிறிது சிறிதாக நாடு வாரியாகத் தான் கொண்டு வரமுடியும் என்று தெரிவித்துள்ளது. எனவே, இந்தியாவுக்கு எப்போது இம்முறை வரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரே அக்கவுண்ட் வெவ்வேறு நண்பர்கள் பயன்படுத்தினால் அது எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது?

நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைப் பொறுத்தவரையில், அவை நம்முடைய கணினியின் ஐபி முகவரியை கண்காணிக்கிறது. எனவே, ஒரே அக்கவுண்டாக இருந்தால் கூட அது வெவ்வேறு கம்ப்யூட்டர்களில், அதாவது வெவ்வேறு ஐபி முகவரியில் இருப்பதால், எளிதில் கண்டறியப்படுகிறது. 

நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தில் அதிரடி மாற்றங்கள்:

நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தில் தற்போது சந்தா திட்டங்கள் மாற்றுவதற்கான நடவடிக்கை ஒரு புறம் நடந்து வருவதாக தெரிகிறது. இன்னொரு புறம் அதன் சிஇஓ பதவியில் இருந்தவரே ராஜினாமா செய்துவிட்டார். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ரீட் ஹேஸ்டிங்ஸ். இவரே நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஆவர். 

வாங்க வாங்க… WhatsAppல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அப்டேட்!

கடந்த ஆண்டின் இறுதியில் 7 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்ற. ஹாரி மற்றும் மேகனின் எக்ஸ்ப்ளோஸிவ் என்ற வெப் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது. இதனால் நெட்பிளிக்ஸின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

கடந்த 2022 ஆண்டின் முதல் அரையாண்டில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்த்த அளவில் இல்லை. வருவாயை உயர்த்த பல்வேறு முடிவுகளை நெட்பிளிக் நிறுவனம் எடுத்தது. இருப்பினும், அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நெட்ஃபிளிக்ஸின் வருவாய் வெறும் 1.7 முதல் $7.84 பில்லியன் வரை மட்டுமே உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios