Asianet News TamilAsianet News Tamil

Netflix நிறுவனத்தின் சிஇஓ ராஜினாமா.. பெருநிறுவனங்களில் அடுத்தடுத்து சிக்கல்!


Netflix இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ், தனது தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ளார்.

Netflix co founder CEO Reed Hastings has stepped down Ted appointed as new CEO
Author
First Published Jan 20, 2023, 4:27 PM IST

ஓடிடி தளங்களில் முன்னனி இடத்தில் இருக்கும் நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ் ஆகும்.

இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ரீட் ஹேஸ்டிங்ஸ். இவரே நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஆவர். கடந்த ஆண்டின் இறுதியில் 7 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றத. ஹாரி மற்றும் மேகனின் எக்ஸ்ப்ளோஸிவ் என்ற வெப் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது. இதனால் நெட்பிளிக்ஸின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனிடையே கடந்தாண்டு பொருளாதார மந்தநிலை அடைந்ததால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் தனது சந்தா கட்டணங்களை மாற்றியமைத்தது. அவ்வாறு சந்தா கட்டணம் மாற்றியமைத்த நேரத்தில், ரீட் ஹேஸ்டிங்ஸ் தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், Netflix இன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டெட் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹேஸ்டிங்ஸ் தனது வலைப்பக்கம் ஒன்றில் ராஜினாமா பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், “இன்று முதல், கிரெக் பீட்டர்ஸ் COO பதிவியில் இருந்து இணை தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்ந்துள்ளார். டெட் சிஇஓவாக இருப்பார். இதன்பிறகு, ​​நான் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றுவேன். நானும், டெட், கிரெக்கும் சுமார் 15 ஆண்டுகளாக வெவ்வேறு தளங்களில் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம்.  இன்னும் பல வருடங்கள் அவர்களுடன் இணைந்து இந்த புதிய பொறுப்பின் மூலம் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

கடந்த 2022 ஆண்டின் முதல் அரையாண்டில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்த்த அளவில் இல்லை. வருவாயை உயர்த்த பல்வேறு முடிவுகளை நெட்பிளிக் நிறுவனம் எடுத்தது. இருப்பினும், அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நெட்ஃபிளிக்ஸின் வருவாய் வெறும் 1.7 முதல் $7.84 பில்லியன் வரை மட்டுமே உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டங்களில் பெருநிறுவனங்கள் இக்கட்டான சூழல்நிலைகளைச் சந்தித்து வருகின்றன. பல நிறுவனங்களில் நிர்வாக மாற்றம், உயர் அதிகாரிகள் மாற்றம், திட்டங்கள் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அமேசான், கூகுள், டுவிட்டர் உள்ளிட்ட பலப்பல நிறுவனங்களில் வேலையிழப்பு, பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios