Asianet News TamilAsianet News Tamil

ஸ்மார்ட் போன் விலை  குறைந்தால்  மட்டுமே டிஜிட்டல்  இந்தியா கனவு சாத்தியம் -  கூகிள் சிஇஒ கருத்து...!!  

need to-reduce-smart-phones-rate-said-sundar-pichai
Author
First Published Jan 6, 2017, 3:10 PM IST


ஸ்மார்ட் போன் விலை  குறைந்தால்  மட்டுமே ...” டிஜிட்டல்  இந்தியா  உருவாகும் “- கூகிள் சிஇஒ கருத்து...!!  

இந்தியாவில் , ரொக்கமில்லா பரிவர்த்தனையை  மேற்கொள்ள வேண்டும் என  மத்திய அரசு  தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் , இது எந்த அளவுக்கு சாத்தியம் என , கூகிள் சிஇஒ  சுந்தர்  பிச்சை   கருத்து தெரிவித்துள்ளார்.

தான் படித்த ஐஐடி கரக்பூர் கல்வி நிறுவன  நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய  , கூகிள் சிஇஒ  சுந்தர் பிச்சை, மாணவர்களுடன்  பல  கருத்துக்களை  பகிர்ந்து கொண்டார்.

அதாவது, 2014  ஆம்  ஆண்டு,  மைக்ரோ மேக்ஸ் உள்ளிட்ட  நிறுவனங்கள்,  6,399  ரூபாய்க்கு  ஸ்மார்ட்  போன்  வழங்கியது.  ஆனால் தற்போது,  ஆயிரம் ரூபாய்க்கு  கூட ஸ்மார்ட் போன்  கிடைக்கிறது. இருந்தபோதிலும்,  குறைந்த  விலையில் கிடைக்க க்கூடிய  ஸ்மார்ட் போனில்  அனைத்து வசதிகளும்  பெற முடியாது.

குறைந்தபட்சம்  3  ஆயிரம்  ரூபாயில்  ஸ்மார்ட்  போன்  வாங்கினால்  தான்,  அடிப்படை  சேவையை   பெற முடிகிறது  என்றார்.

இந்தியாவின்   நிலைப்பாடு என்ன ?

ஸ்மார்ட் போன்  பொறுத்தவரையில் , குறைந்த விலையில் நல்ல தரமான ஸ்மாட்  போன்  கிடைத்தால் மட்டுமே அனைவராலும்  , டிஜிட்டல்  பரிவர்த்தனையை  மேற்கொள்ள முடியும் என  குறிப்பிட்டார் .

மேலும் பேசிய சுந்தர் பிச்சை, இந்தியாவில் ஆங்கிலத்தை விட இந்தி  மொழியை தான்  அதிகம் பேசுக்கின்றனர். எனவே , ஹிந்தியில்  கூகிள்  சேவையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் , மேலும்  பல திட்டங்களை செயல்படுத்த  உள்ளதாகவும்  தெரிவித்தார்.

 ஸ்மார்ட் போனில் , மக்கள்  எளிதில்  புரிந்துகொள்ளும்  உள்ளூர்  மொழியை   கொண்டு வந்தால் தான் ,  டிஜிட்டல்  இந்தியாவிற்கு  சாத்தியம்  என  சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

அடுத்த  1௦  ஆண்டுகளில் , இந்தியாவில் மிக பெரிய  மென்பொருள் நிறுவனம்  உருவாகும் என நம்ம்பிக்கை  தெரிவித்துள்ளார் .

 

Follow Us:
Download App:
  • android
  • ios