Asianet News TamilAsianet News Tamil

5G அப்டேட்: Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!

வோடஃபோன் ஐடியா தற்போது 5ஜி சேவைகளை வழங்கும் வகையில், மோட்டோ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது

motorola and Vi have partnered to offer seamless 5G connectivity in 5G smartphones
Author
First Published Feb 6, 2023, 6:48 PM IST

இந்தியாவில் தற்போது ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு 5ஜி சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றன. ஆனால், இதுவரையில் வோடஃபோன் ஐடியா தரப்பில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில், நாட்டின் மூன்றாவது பெரிய நெட்னொர்க்கான Vi (Vodafone Idea), தற்போது வாடிக்கையாளர்களை மேம்படுத்தும் வகையில், 5G ஸ்மார்ட்போன்களில் தடையற்ற 5G இணைப்பை வழங்குவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக மோட்டோரோலாவுடன் வோஃபோன் ஐடியா நிறுவனம் கைகோர்த்துள்ளது.

மோட்டோரோலா ஸ்மாரட்போன்களில் Vi 5ஜி சேவை:

மோட்டோரோலா மற்றும் Vi ஆகியவை வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், 5G ஸ்மார்ட்போன்களில் தடையற்ற 5G நெட்வொர்க்கை வழங்க கூட்டு சேர்ந்துள்ளன. இதுதொடர்பாக மோட்டோ நிறுவனம் தரப்பில் கூறுகையில், டெல்லியில் மோட்டோவின் பிரபல 5ஜி ஸ்மார்ட்போனை வோடஃபோன் ஐடியா நெட்வொர்க்கின் 5ஜி பேண்ட்வித்தில் வைத்து சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மோட்டோவை பொறுத்தவரையில், குறைந்த விலை முதல் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரையுள்ள 5ஜி போன்களில், அதிகமான 5ஜி பேண்ட்களை கொண்டுள்ளன. மேலும் விரைவான, பாதுகாப்பான 5G கவரேஜுக்கான மேம்பட்ட சாப்ட்வேர், ஹார்ட்வேர் திறன்களை வைத்துள்ளன. Moto g62 5G உட்பட மோட்டோவின் அனைத்து 5G ஸ்மார்ட்போன்களும் குறைந்தது 11 முதல் 13 வரையிலான  5G பேண்டுகளை கொண்டுள்ளன. மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில், இது குறைந்த விலை ஸ்மார்ட்போனில் கூட அதிகமான பேண்ட்வித்கள் கொண்டுள்ளது என்ற பெயரை பெற்றுள்ளது.

இந்தியாவில் எல்லா 5ஜி பேண்டுகளையும் கொண்டுள்ள மோட்டோ:

மோட்டோ நிறுவனம் தரப்பில் கூறுஐகயில், மோட்டோ ஸ்மார்ட்போன்கள் திறன் பெற்ற, மலிவு 5G பேண்டுகளை வழங்குகிறது. அதன் 5G ஸ்மார்ட்போன்களானது நம்பகத்தன்மை, நல்ல கவரேஜ், தொழில்துறையில் முன்னணி வேகம், பாதுகாப்பு தன்மையுடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் விலைவித்தியாசம் இல்லாமல் அகில இந்திய 5G பேண்டுகளை கொண்டுள்ளன.

Poco X5 Pro இன்று அறிமுகம்.. எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்!

Vi 5G பேண்ட்வித் கொண்ட மோட்டோரோலா 5G சாதனங்கள்:

மோட்டார்லா எட்ஜ் 30 அல்ட்ரா
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன்
மோட்டார் சைக்கிள் G62 5G
மோட்டோரோலா எட்ஜ் 30
மோட்டோ ஜி82 5ஜி
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ
Moto G71 5G
மோட்டார் சைக்கிள் G51 5G
மோட்டோரோலா எட்ஜ் 20
மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ
மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன்
 

Follow Us:
Download App:
  • android
  • ios