ஒரே சமயத்தில் எல்லா பணத்தையும் எண்ணும் சூப்பர் மெஷின்...!! ரிசர்வ் வங்கி அறிமுகம் ......!!!
புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் , ஒன்றாக சேர்த்தே எண்ணக்கூடிய புதிய பணம் எண்ணும் இயந்திரத்தை மத்திய ரிசர்வ் வங்கி சென்ற வாரம் அறிமுகம் செய்தது.
வங்கிகள் :
குறிப்பாக , வங்கிகளில் நாம் பணத்தை டெபாசிட் செய்யும் போது, ஒரே பண மதிப்பை கொண்ட ரூபாய் நோட்டுக்களை மட்டுமே தனியாக கொடுத்து, பணம் என்னும் இயந்திரத்தின் மூலம் சரிப்பார்க்க முடியும். ஆனால், தற்போது, ரூ 10 ,ரூ 20, ரூ 50, ரூ 100, ரூ 500, ரூ 2,000 என அனைத்தையும் ஒன்றாக வைத்தே , இந்த புதிய பணம் எண்ணும் இயந்திரத்தின் மூலம் கணக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவேற்கத்தக்கது :
புதியதாக அறிமுகம் செய்துள்ள, இந்த பணம் எண்ணும் இயந்திரம் வரவேற்க தக்கதாக உள்ளது. ஆனால், அதே சமயத்தில், டிஜிட்டல் இந்தியாவை நோக்கி செல்லும் போது, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் இந்த சமயத்தில், புதியதாக அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த பணம் எண்ணும் இயந்திரம் இனி வரும் காலங்களில், எந்த அளவுக்கு பயன்படும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க முடியும் .