Russia-Ukraine crisis : இதையெல்லாம் ஏத்துக்கவே முடியாது - ரஷ்யாவுக்கு அதிரடி தடை விதித்த 2022 MWC

பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் 2022 MWC நிகழ்வில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 

Mobile world congress 2022 bans russia

டெலிகாம் துறையின் மிகப்பெரும் வருடாந்திர கூட்டமான சர்வதேச மொபைல் காங்கிரஸ் (2022 Mobile World Congress) நிகழ்வு இந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி துவங்கி மார்ச் 3 வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வு பார்சிலோனாவில் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான நிகழ்வில் ரஷ்யாவுக்கான பெவிலியன் இடம்பெறாது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குழு தெரிவித்து இருக்கிறது.

"மால்கோவின் நடவடிக்கைகளை சர்வதேச மொபைல் காங்கிரல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். இத்துடன் ரஷ்ய நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் அந்நாட்டின் மீது  ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் குழுவின் மூத்த நிர்வாக அதிகாரி ஜான் ஹாஃப்மேன் தெரிவித்து இருக்கிறார்.

Mobile world congress 2022 bans russia

"தற்போதைய சூழலில் நிகழ்ச்சியை நிறுத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ எந்த தேவையும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இந்த சூழலை தொடர்ந்து உற்று நோக்கி வருகிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார். ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அவர்களின் நிர்வாக அதிகாரிகள் என பலர் நிகழ்வுக்கு வர தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் லகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின் இத்தனை பேர் கலந்து கொள்ளும் மிகப் பெரும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2019 உடன் ஒப்பிடும் போது குறைவு தான். பெருந்தொற்றுக்கு முன் நடைபெற்ற நிகழ்வை போன்றே இந்த ஆண்டு நிகழ்வு இருக்கும் என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் குழு எதிர்பார்க்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios