Micromax note 2 : மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் - ஜனவரி 25-ல் வெளியீடு?
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த நவம்பர் 2020 வாக்கில் புதிதாக இன் பிராண்டு மூலம் ஸ்மார்ட்போன் சந்தையில் ரி-எண்ட்ரி கொடுத்தது. வெளியீட்டின் போதே 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களையும் உருவாக்கி வருவதாக மைக்ரோமேக்ஸ் அறிவித்தது. தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்தியாவில் புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போன் ஜனவரி 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
புது ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது ஸ்மார்ட்போன் பற்றி பல்வேறு பதிவுகளை மைக்ரோமேக்ஸ் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு உள்ளது. இவற்றில் முதல் டீசர், அடுத்தக்கட்டத்திற்கு நாங்கள் தயாராகி விட்டோம்,நீங்கள் ? எனும் கேள்வி இடம்பெற்று இருக்கிறது.
இதுவே மைக்ரோமேக்ஸ் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை உணர்த்தும் வகையில் அமைந்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட மற்ற பதிவுகளின் படி புது ஸ்மார்ட்போன் அழகிய பேக் பேனல், அசத்தலான டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்டட்போன் ஃபிளாட் ஃபிரேம் கொண்டிருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேமிற்கு மாற்றாக பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இத்துடன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் FHD+ ரெசல்யூஷன், மீடியாடெக் அல்லது குவால்காம் பிராசஸர், 4GB/6GB, 64GB/128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பெரிய பேட்டரி, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டிருக்கும்.