MG Cyberster: முதல்ல கம்மி விலையில் ஹாலோ கார்.. எம்.ஜி. மோட்டார் சூப்பர் ஸ்கெட்ச்..!
MG Cyberster: புதிய எம்.ஜி. கார் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக உருவெடுக்கும் என எம்.ஜி. மோட்டார் நம்புகிறது.
எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் சைபர்ஸ்டர் ரோட்ஸ்டர் மாடல் 2024 ஆண்டிற்குள் குறைந்த விலை ஹாலோ கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் சீன நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் என தெரிகிறது. பிரிட்டனில் எம்.ஜி. மோட்டார்ஸ் வாகன விற்பனை 2020 ஆண்டு 18 ஆயிரத்து 415 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டு மட்டும் 66 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து 30 ஆயிரத்து 600 யூனிட்களை விற்பனை செய்தது.
எம்.ஜி. சைபர்ஸ்டர் வெளியீட்டு விவரம்:
எம்.ஜி. 4 ஹேட்ச்பேக் மாடல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு விடும். இந்த மாடல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ID.3 மாடலுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய எம்.ஜி. கார் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக உருவெடுக்கும் என எம்.ஜி. மோட்டார் நம்புகிறது.
"இந்த கார் எம்.ஜி.யின் பாரம்பரியம் மிக்க மதிப்பீடூகள் அனைத்தையும் கொண்டிருக்கிறது. இதில் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது. இது முற்றிலும் சுவாரஸ்யமான மாடலாகவும், கொடுக்கும் விலைக்கு ஏற்ற ஒன்றாகவும் நிச்சயம் இருக்கும். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்காது," என பிரிட்டனுக்கான எம்.ஜி. மோட்டார் வர்த்தக இயக்குனர் பிஜோன்கிஸ் தெரிவித்தார்.
கான்செப்ட் மாடல்:
எம்.ஜி. ZS EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கி வருகிறது. புதிய எம்.ஜி. 4 அதிக மைலேஜ் வழங்கும். முன்னதாக எம்.ஜி. சைபர்ஸ்டர் கான்செப்ட் மாடல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் மோட்டார் விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதுதவிர இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஷாங்காய் மோட்டார் விழாவில் மேலும் புதிய கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கான்செப்ட் மாடல் பிஸ்போக் இ.வி. ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும்.
ஸ்போர்ட்ஸ் கார்:
ஸ்போர்ட்ஸ் கார்களிடம் இருக்கும் பிரச்சினையே அவற்றை எல்லோருக்கும் பிடிக்கும், ஆனால் பலரால் அவற்றை வாங்க முடியாமல் இருப்பது தான். ஸ்போர்ட்ஸ் கார்களில் முதலீடு செய்து, நீண்ட கால எதிர்நோக்கி இருப்பின், அவற்றில் இருந்து லாபம் கிடைக்கும். இவை பெருமளவு பி.ஆர். மற்றும் விளம்பர நன்மைகளை கொண்டு வரும்," என எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் பிஜோன்கிஸ் மேலும் தெரிவித்தார்.