வாட்ஸ்அப், மெசெஞ்சரில் ChatGPT போன்ற வசதி! மெட்டா கனெக்ட் மாநாட்டில் ஜூக்கர்பெர்க் சொன்ன குட் நியூஸ்!
பேஸ்புக் மெசெஞ்சர், வாட்ஸ்அப் போன்ற அப்ளிகேஷன்களில் இணைப்பதன் மூலம் தாமாகவே புதிய ஸ்டிக்கர்களை உருவாக்கி பயன்படுத்தும் வசதி கிடைக்க உள்ளது.
புதிய செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் டிஜிட்டல் அசிஸ்டென்ட்கள் குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கலிபோர்னியாவின் மென்லோ பார்க்கில் உள்ள மெட்டா நிறுவனத்தின் தலைமையகத்தில் VR டெவலப்பர்களுக்கான மெட்டா கனெக்ட் (Meta's Connect) மாநாடு புதன்கிமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜூக்கர்பெர்க் (Zuckerberg AI) செயற்கை நுண்ணறிவு மென்பொருள், குவெஸ்ட் 3 (Quest 3) விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், ரே-பான் ஸ்மார்ட் கிளாஸ் (Ray-Ban smart glasses) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
மெட்டாவின் ஜூக்கர்பெர்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ChatGPT போன்றது ஆகும். இதனை பேஸ்புக் மெசெஞ்சர், வாட்ஸ்அப் போன்ற அப்ளிகேஷன்களில் இணைப்பதன் மூலம் தாமாகவே புதிய ஸ்டிக்கர்களை உருவாக்கி பயன்படுத்தும் வசதி கிடைக்க உள்ளது.
மெட்டா கனெக்ட் நிகழ்வின்போது பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆண்ட்ரூ போஸ்வொர்த்தும் இதுபற்றிப் பேசியுள்ளார். "எடுத்துக்காட்டாக, கார்ட்டூன் போன்ற கூடைப்பந்தைக் கையில் வைத்திருக்கும் பீட்சாவை ஸ்டிக்கராக அனுப்ப நினைத்தால், 'கூடைப்பந்து விளையாடும் பீட்சா' என்று டைப் செய்தால் போதும்" என்று ஆண்ட்ரூ குறிப்பிடுகிறார்.
இன்ஸ்டாகிராமில் புதிய AI எடிட்டிங் வசதிகள் அடுத்த மாதம் வரவிருக்கின்றன. அவற்றையும் ஜூக்கர்பெர்க் மெட்டா கனெக்ட் மாநாட்டில் அறிமுகப்படுத்தினார். இது பயனர்கள் தங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சில வார்த்தை குறிப்புகளைக் கட்டளையாக அளிப்பதன் மூலமே எடிட் செய்யலாம். இந்த வசதியை செய்துகாட்டிய ஜூக்கர்பெர்க், தனது குழந்தைப்பருவ படம் ஒன்றில் தனது தலைமுடியை நீல நிறத்திற்கு மாற்றிக் காட்டினார். வேறொரு புகைப்படத்தில் தான் வளர்க்கும் பீஸ்ட் என்ற நாயின் உருவத்தை ஓரிகமி சிலை போல மாற்றினார்.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மெட்டா நிறுவனத்தின் எமு கம்ப்யூட்டர் விஷன் மாடல் (Emu computer vision model) அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இது மெட்டாவின் நிரல்மொழி உருவாக்கும் மென்பொருளான லாமாவின் தொடர்ச்சி என்று மார்க் ஜூக்கர்பெர்க் வகைப்படுத்தினார். எமு மாடல் மூலம் ஐந்து வினாடிகளில் புதிய படங்களை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.