மெசன்ஜரில் ஒருவழியாக அந்த வசதி அறிமுகம்

மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட் அனைவருக்கும் முழுமையான என்க்ரிப்ஷன் வசதியை வழங்குகிறது.

 

Messenger rolls out end-to-end encrypted chats, calls to everyone

2016 ஆம் ஆண்டு மெசன்ஜர் செயலியில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி முதன்முறையாக வழங்கப்பட்டது. அந்த சமயம், என்க்ரிப்ஷன் வசதி சீக்ரெட் சாட்ஸ் முறையில் வழங்கப்பட்டது. இததுதவிர மெசன்ஜர் செயலி பேஸ்புக் மெசன்ஜர் என்றும் பேஸ்புக் தற்போது மெட்டா என்றும் மாறி விட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

மெசன்ஜர் செயலியின் க்ரூப் சாட், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி வழங்குவதற்கான சோதனை கடந்த ஆண்டு துவங்கியது. தற்போது இந்த அம்சம் பீட்டாவில் இருந்து வெளியாகி உலகம் முழுக்க அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. எனினும், இந்த அம்சம் பபயனர்களுக்கு தானாக செயல்படுத்தப்படவில்லை. மாறாக பயனர்கள் மெசன்ஜர் செட்டிங்ஸ் சென்று அவர்களாகவே செயல்படுத்திக் கொள்ள வேண்டும். 

Messenger rolls out end-to-end encrypted chats, calls to everyone

இவ்வாறு செய்த பின் சாட்ஸ், கால் உள்ளிட்டவை வாட்ஸ்அப் செயலியில் என்க்ரிப்ஷன் கொண்டு பாதுகாக்கப்படுவதை போன்றே பாதுகாக்கப்படும். இதுதவிர டிஸ்-அபியரிங் மெசேஜ்களை எவரேனும் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் அதுபற்றிய நோட்டிஃபிகேஷன் வழங்குவதாக மெசன்ஜர் அறிவித்து இருக்கிறது. இதே அம்சம் மெசன்ஜர் செயலியின் வேனிஷ் மோடில் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த அம்சம் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் சாட்களுக்கும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக 2020 வாக்கில் மெசன்ஜர் செயலியில் வேனிஷ் மோட் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல்களை மறுமுனையில்  பெறுவோர் பார்த்ததும் மறைந்து விடும். இது வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் வியூ ஒன்ஸ் அம்சம் போன்றே செயல்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios