திடீரென 2 ஆயிரம் கார்களை ரிகால் செய்யும் மெர்சிடிஸ் பென்ஸ்... ஏன் தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் வலைதளத்தில் தங்களின் கார் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை வாடிக்கையாளர்கள் பார்த்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

 

Mercedes-Benz India To Recall 2,179 Units Of The ML, GL and R-Class

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் 2 ஆயிரத்து 179 கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து உள்ளது. ரிகால் செய்யப்படும் கார்கள் 2005 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் GL மற்றும் ML கிளாஸ் எஸ்.யு.வி.க்கள் மற்றும் R கிளாஸ் எம்.பி.வி.க்கள் இடம்பெற்றுள்ளன. 

வாகனத்தின் பிரேக் பூஸ்டரில் துருப் பிடித்து இருக்கலாம் என்ற காரணத்திற்காக ரிகால் செய்யப்படுகின்றன. முன்னதாக உலகம் முழுக்க சுமார் பத்து லட்சம் கார்களை இதே காரணத்திற்காக ரிகால் செய்யப் போவதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. 

பாதிக்கப்பட்ட கார் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு வாகனத்தை சரி செய்ய அழைப்பு விடுக்க மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா திட்டமிட்டு உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் வலைதளத்தில் தங்களின் கார் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை வாடிக்கையாளர்கள், தாங்களாகவே பார்த்து தெரிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

Mercedes-Benz India To Recall 2,179 Units Of The ML, GL and R-Class

மெர்சிடிஸ் பென்ஸ் விளக்கம்:

“பல்வேறு அறிக்கைகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, சில ML, GL (164 பிளாட்பார்ம்) மற்றும் R கிளாஸ் (251 பிளாட்பார்ம்) மாடல்களின் பிரேக் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என மெர்சிடிஸ் பென்ஸ் AG கண்டுபிடித்து இருக்கிறது. தொடர்ச்சியாக நீர் படும் பாகம் என்பதால் துருப்பிடித்து இருக்கும். இதன் காரணமாக பிரேக் போர்ஸ் சப்போர்ட் குறைந்து இருக்கலாம். இது போன்ற சூழலில் பிரேக் சரியாக வேலை செய்யாமல் போகும் அபாயம் உள்ளது,” என மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

“ரிகால் வழிமுறையின் போது பாதிக்கப்பட்ட வாகனங்களை முழுமையாக பரிசோதனை செய்து, அதில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினைக்கு ஏற்ப, தேவை இருப்பின் பாகங்கள் மாற்றப்படும். பாதுகாப்பான பயணத்திற்கு பிரேக்கிங் மிகவும் அத்தியாவசியமானது என்பதால், பாதிக்கப்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சர்வீஸ் செண்டரை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என மெர்சிடிஸ் இந்தியா தெரிவித்து இருக்கிறது.

பாதிக்கப்பட்ட கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இந்த பிரச்சினை சரி செய்யப்படும் வரை கார் பயன்படுத்த வேண்டாம் என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா கேட்டுக் கொண்டு இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios