விக்ரம் படத்துல ரோலெக்ஸ் வைத்திருந்தது.. மார்ஷல் BT ஸ்பீக்கர் அறிமுகம்.. விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!
ஆக்ஷன் III, ஸ்டான்மோர் III மற்றும் வோபன் III மாடல்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மார்ஷல் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
![Marshall unveils three new Bluetooth speakers offering great sound cool designs Marshall unveils three new Bluetooth speakers offering great sound cool designs](https://static-gi.asianetnews.com/images/01g58pjkzapsmy6e5vt0er3mcd/marshall-action-3_363x203xt.jpg)
மார்ஷல் நிறுவனம் மூன்று சக்திவாய்ந்த ஹோம்லைன் வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. மூன்று ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களிலும் புதிய சவுண்ட் கனெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்கள் மார்ஷல் ஆக்ஷன் III, ஸ்டான்மோர் III மற்றும் வோபன் III வயர்லெஸ் ஸ்பீக்கர் என அழைக்கப்படுகின்றன. மூன்று புதிய மார்ஷல் வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல்களின் விற்பனை ஜூன் 23 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
மூன்று ஸ்பீக்கர் மாடல்களிலும் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, மேம்பட்ட சவுண்ட் ஸ்டேஜ் மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையிலான டிசைன் கொண்டு இருக்கிறது. ஆக்ஷன் III, ஸ்டான்மோர் III மற்றும் வோபன் III மாடல்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மார்ஷல் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். மூன்று புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்களிலும் குறிப்பிடத்தக்க அப்கிரேடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அம்சங்கள்:
மார்ஷல் நிறுவனத்தின் மூன்று ப்ளூடூத் ஸ்பீக்கர்களிலும் ட்வீட்டர்கள் மற்றும் வேவ்கைடுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை தலைசிறந்த சவுண்ட் அனுபவத்தை வழங்குகின்றன. சந்தையில் கிடைக்கும் மற்ற ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களுக்கு அதிகளவு சவால் விடும் வகையில் மார்ஷல் ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அசத்தலான தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள புதுமை மிக்க பிளேஸ்மென்ட் காம்பென்சேஷன் தொழில்நுட்பம் புதிய ஸ்பீக்கர்களை தனித்துவம் மிக்கதாக மாற்றி உள்ளது.
இந்த தொழில்நுட்பம் ஸ்பீக்கர்களில் உள்ள EQ ப்ரோஃபைலை ஆப்டிமைஸ் செய்யும். ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி தவிர, புதிய மார்ஷல் ஸ்பீக்கர்களை 3.5mm ஆடியோ ஜாக் கொண்டிருக்கிறது. மேலும் இவற்றில் பில்ட் இன் டைனமிக் லவுட்னஸ் அம்சம் உள்ளது. இது சிறப்பான அவுட்புட் வழங்குகிறது. மார்ஷல் ப்ளூடூத் ஸ்பீக்கர் 70 சதவீதம் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் சுத்த சைவ பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் நிற விவரங்கள்:
ஆக்ஷன் II மாடலின் வூஃபரில் 30 வாட் ஆம்ப்லிஃபையர், ட்வீட்டர்களில் இரண்டு 15 வாட் ஆம்ப்கள் உள்ளன. ஸ்டான்மோர் III மாடல் ஆண்டன் III-ஐ விட பெரிய ஸ்பீக்கர் உள்ளது. இரு ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் வூஃபர்களில் 50 வாட் ஆம்ப் வழங்கப்பட்டு உள்ளது. மார்ஷல் வோபன் III மாடலில் HDMI கனெக்டிவிட்டி உள்ளது. இதன் விலை 579 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 45 ஆயிரத்து 264 என்றும் ஆக்ஷன் III விலை 279 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21 ஆயிரத்து 811 மற்றும் ஸ்டான்மோர் III விலை 379 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 29 ஆயிரத்து 629 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மார்ஷல் புது ஸ்பீக்கர் மாடல்கள்ஃ பிரவுன், பிளாக் மற்றும் வைட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை ஜூன் 23 ஆம் தேதி துவங்கப்பட இருக்கிறது.