உங்க சங்காத்தமே வேணாம் - கடுப்பில் போனை Frame செய்து மாட்டிய சாம்சங் வாடிக்கையாளர்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர் ஃபிரேம் செய்து வைத்திருக்கிறார். இதற்கான காரணத்தை பார்ப்போம்.

Man frames broken Galaxy Z Flip3 after Samsung refused to fix it under warranty

சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்கி நான் பட்ட கஷ்டம் என்ற வாக்கில் அவரது பதிவு இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறது. வைரல் பதிவில் உடைந்து போன கேலக்ஸி Z ஃப்ளிப் 3 போனை ஃபிரேம் செய்ததற்கான காரணத்தை அவர் விளக்கி குறிப்பிட்டு இருக்கிறார்.

வைரல் புகைப்படத்தின் படி, ஃபிரேம் ஒன்றில் உடைந்த நிலையில் உள்ள வாடிக்கையாளரின் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மற்றும் வாரண்டியில் அந்த போனை சரி செய்ய முடியாது என சாம்சங் கொடுத்த கடிதம் இடம்பெற்று இருக்கிறது. இந்த சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தான், இனி சாம்சங் சாதனம் எதையும் வாங்க போவதில்லை என தெரிவித்து இருக்கிறார். 

Man frames broken Galaxy Z Flip3 after Samsung refused to fix it under warranty

வாங்கி மூன்றே மாதங்கள் ஆன நிலையில், இந்த வாடிக்கையாளரின் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடல் ஸ்கிரீனின் மத்தியில் கருப்பு நிறத்திற்கு மாறியது. பின் ஒருபக்க ஸ்கிரீன் தொடுதிரை வேலை  செய்யமால் போனது. போனினை தான் கீழே போடவே இல்லை என அந்த வாடிக்கையாளர் அடித்துக் கூறுகிறார். மேலும் போனிற்கு வாரண்டி இருந்ததால், அதனை சரி செய்ய அவர் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலை சரிவீஸ் செண்டர் கொண்டு சென்றார். 

"சாதனம் வாரண்டியின் கீழ் சரி செய்யப்பட மாட்டாது. நீங்கள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில், ஸ்மார்ட்போனினை வல்லுனர் குழுவிற்கு ஆய்வு செய்ய அனுப்பினோம். ஆய்வில் போனின் டிஸ்ப்ளே மட்டுமின்றி ஃபிரேம் உடைந்து இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. போன் கீழே விழுந்து, அளவுக்கு மீறிய அழுத்தம் அல்லது வளைக்கப்பட்டு இருத்தல் போன்ற காரணிகளால் உடைந்து இருக்கும்," என சாம்சங் பதில் அளித்து இருக்கிறது. 

Man frames broken Galaxy Z Flip3 after Samsung refused to fix it under warranty

இதுமட்டுமின்றி உடைந்த ஸ்மார்ட்போனை சரி செய்ய 340 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 25,609 வரை செலவாகும் என சாம்சங்  தெரிவித்து இருக்கிறது. இதனால் உடைந்து போன ஸ்மார்ட்போனை சரி செய்ய சாம்சங்கிற்காக ஒரு பைசா கூட செலவு செய்ய முடியாது என முடிவு செய்து உடைந்த போன் மற்றும் சாம்சங் அளித்த பதில் ஆகியவற்றை நொந்து போன வாடிக்கையாளர் ஃபிரேம் செய்து வைத்திருக்கிறார்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios