எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் Airtel, Jio 5G சேவைகள் கிடைக்கும்? முழு பட்டியல்

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது 5ஜி சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றன. அதே நேரத்தில் 5ஜி ஸ்மார்ட்போன்களில் 5ஜிக்கான அப்டேட்டுகளை வழங்கும் பணியிலும் இறங்கியுள்ளன. அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதியின்படி எந்தெந்த பிரபல ஸ்மார்ட்போன்களில் 5ஜி கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறித்து இங்குக் காணலாம்.

List of jio airtel 5g supported smartphones in india 2022, check details here

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களான ஏர்டெலும், ஜியோவும் ஏற்கனவே 5ஃி நெட்வொர்க் இணைப்பை 50க்கும் மேற்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் வரும் நாட்களில் மேலும் பல நகரங்களில் கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 5G அறிமுகம் செய்யப்படும் என ஜியோ உறுதியளித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் மார்ச் 2024க்குள் நாட்டின் அனைத்து மூலைகளிலும் 5ஜி சென்றடையும் என்று கூறியுள்ளது. இப்படியான சூழலில் இந்தியாவில் ஏற்கனவே 5Gயை ஆதரிக்கும் Apple, Samsung, ஒன்பிளஸ் மற்றும் பிற ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இங்கே காணலாம்:

ஆப்பிள் இறுதியாக அதன் iOS 16.2 அப்டேட்டில் 5G தொழில்நுட்பத்தை ஏற்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. கூகுளின் பிக்சல் 6 சீரிஸ் and பிக்ஸல் 7 சீரிஸ் போன்களில் இன்னும் 5ஜி சாப்ட்வேர் அப்டேட் வரவில்லை. இம்மாத இறுதிக்குள் 5ஜி சாப்ட்வேர் அப்டேட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள்: iPhone 12 சீரிஸ், iPhone 13 சீரிஸ், iPhone 14 சீரிஸ், iPhone SE Gen 3 (2022)

சாம்சங்: கேலக்ஸி S21 சீரிஸ், கேலக்ஸி S22 சீரிஸ், கேலக்ஸி Z Fold 2, Z Fold 3, Z Fold 4, Z Flip 3, Z Flip 4, கேலக்ஸி நோட் 20 Ultra, கேலக்ஸி S20 FE, கேலக்ஸி M52, கேலக்ஸி M42, கேலக்ஸி F42, கேலக்ஸி M32, கேலக்ஸி M13, கேலக்ஸி M53, கேலக்ஸி M33, கேலக்ஸி A73, கேலக்ஸி A22, கேலக்ஸி A52s, கேலக்ஸி A33

நத்திங் போன் ஏர்டெல், ஜியோ இரண்டு 5ஜிகளையும் ஆதரிக்கிறது.

ஒன்பிளஸ்- ஒன்பிளஸ் 10 சீரிஸ், ஒன்பிளஸ் 9 சீரிஸ், ஒன்பிளஸ் 8 சீரிஸ், 

iPhone 12 போன்களில் Airtel, Jio 5G வந்துவிட்டது! 5ஜி சேவையை ஆன் செய்வது எப்படி?

ஷாவ்மி - ஷாவ்மி Mi 10 சீரிஸ் (Mi 10, Mi 10i, Mi 10T, Mi 10T ப்ரோ), ஷாவ்மி 11 சீரிஸ் (Mi 11 Ultra, Mi 11X, Mi 11X ப்ரோ, ஷாவ்மி 11X, ஷாவ்மி 11 Lite NE, ஷாவ்மி 11T ப்ரோ, ஷாவ்மி 11i HyperCharge, ஷாவ்மி 11i) ஷாவ்மி 12 ப்ரோ

ரெட்மி - ரெட்மி நோட் 11T 5G, ரெட்மி நோட் 10T, ரெட்மி நோட் 11 ப்ரோ Plus, ரெட்மி 11 Prime, ரெட்மி K50i

போகோ - போகோ M4, போகோ M4 ப்ரோ, போகோ M3 ப்ரோ, போகோ F3 GT, போகோ F4, போகோ X4 ப்ரோ

ரியல்மி - ரியல்மி 10 சீரிஸ் - ரியல்மி 10 ப்ரோ, ரியல்மி 10 ப்ரோ+, ரியல்மி 9i, ரியல்மி 8s, ரியல்மி 8 5G, ரியல்மி 9, ரியல்மி 9 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ Plus, ரியல்மி 9 SE, ரியல்மி X7, ரியல்மி X7 ப்ரோ, ரியல்மி X7 Max, ரியல்மி X50 ப்ரோ, ரியல்மி நார்சோ சீரிஸ் - நார்சோ 50, நார்சோ 50 ப்ரோ, நார்சோ 30 5G, நார்சோ 30 ப்ரோ 5G.
ரியல்மி GT, ரியல்மி GT ME, ரியல்மி GT 2, ரியல்மி GT 2 ப்ரோ, ரியல்மி GT Neo 2, ரியல்மி GT Neo 3, ரியல்மி GT Neo 3 150W, ரியல்மி GT Neo 3T.

ஒப்போ - ஒப்போ ரெனோ 5G ப்ரோ, ரெனோ 6, ரெனோ 6 ப்ரோ, ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ, ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ, ஒப்போ F19 ப்ரோ+, ஒப்போ F21 ப்ரோ, ஒப்போ F21s ப்ரோ, ஒப்போ K10, ஒப்போ A74, ஒப்போ A53s, 

Vivo - Vivo X50 ப்ரோ, Vivo X 60, Vivo X 60 ப்ரோ, Vivo X60 ப்ரோ+, Vivo X70, Vivo X70 ப்ரோ, Vivo X70 ப்ரோ+, Vivo X80, Vivo X80 ப்ரோ, Vivo V20 ப்ரோ, Vivo V21, Vivo V21e, Vivo V23, Vivo V23 ப்ரோ, Vivo V23e, Vivo V25, Vivo V25 ப்ரோ, Vivo T1, Vivo T1 ப்ரோ,Vivo Y72.

iQOO - iQOO 7 சீரிஸ், iQOO 9 சீரிஸ், iQOO Z6, IQOO Z6 ப்ரோ, iQOO Z 6 Lite, iQOO Z3, iQOO Z5, iQOO Neo 6, iQOO 3, 

மோட்டோரோலா - மோட்டோரோலா Edge 30 சீரிஸ், மோட்டோரோலா Edge 20 சீரிஸ், மோட்டோ Razr 5G, மோட்டோ G62, மோட்டோ G82, மோட்டோ G51, மோட்டோ G71

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios