Asianet News TamilAsianet News Tamil

‘மீட்டிங்கில் இருந்து வெளியேறுங்கள்..’ ஒரு நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்று எலான் மஸ்க் அட்வைஸ்

நீங்கள் பங்களிக்கவில்லை என்றால் மீட்டிங்கில் இருந்து வெளியேறலாம் என்று பணியாளர்களிடத்தில் எலோன் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவருடைய புதிய யுக்தி விவரங்கள் வைரலாகி வருகிறது.

Leave meeting if you are not contributing: Elon Musks six important rules of productivity here
Author
First Published Dec 1, 2022, 10:39 AM IST

கடந்த சில வாரங்களாக எலான் மஸ்க் தான் உலகளவில் டிரெண்டிங்கில் உள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை மறுசீரமைக்கும் விதமும், எதிர்கருத்துக்களை எதிர்கொள்ளும் விதமும் பரபரப்பாக பேசபட்டு வருகிறது. நிறுவனத்தைப் பொறுத்தவரையில் எலான் மஸ்க் பல திட்டங்களை வகுப்பதிலும், அதை செயல்படுத்துவதில் முனைப்புடனும் இருக்கலாம். ஆனால், சக பணியாளர்களைப் போலவே மீட்டிங்கில் ஒருசில விஷயங்களில் எரிச்சலடைகிறார் என்று கூறப்படுகிறது. 

குறிப்பாக வேலையில் நல்ல  உற்பத்தி வழங்காத பணியாளர்கள், மீட்டிங்கில் தேவையில்லை, அவர்கள் மீட்டிங்கில் வருவதால் எந்த பலனும் இல்லை என்ற அளவில் சாடுகிறார். ட்விட்டர் 2.0 தளத்தை உருவாக்குவது குறித்து தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், மஸ்க் ஆறு முக்கிய விதிகளை பட்டியலிட்டிருந்தார். அந்த பணி விதிகள் தற்போது வைரலாகி வருகிறது.  

பணியாளர்கள் தேவையற்ற சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும். முக்கியமான அவசரமான விஷயம் இருந்தாலே தவிர, வேறு காரணங்களுக்காக அடிக்கடி மீட்டிங் வைக்கத் தேவையில்லை. அவசரக் காரியம் முடிந்தவுடன் மீட்டிங் நேரம் உடனடியாக குறைக்கப்பட வேண்டும்.

அதிகமாக மீட்டிங்  வைப்பது என்பது பெரிய நிறுவனங்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல. காலப்போக்கில் அது மோசமாகிவிடும். எனவே, முக்கிய விஷயங்கள் தவிர பெரிய மீட்டிங் அனைத்தையும் தவிர்ப்பது நலம். அப்படியே முக்கியமான விஷயங்கள் இருந்தால் கூட அது மீட்டிங்கில் உள்ள அனைவருக்கும் பண்படும் வகையில் இருக்க வேண்டும், உடனடியாக முடிக்க வேண்டும்.

மஸ்க் தனது ஊழியர்களுக்கு வழங்கிய ஒரு மிக முக்கியமான ஆலோசனை என்னவென்றால், பணியாளர்கள் எதையும் பங்களிக்கவில்லை என்றால் மீட்டிங்கில்  இருந்து வெளியேற வேண்டும். இந்த ஆலோசனையானது டீம் லிடர்கள் முரண்பட்டு இருக்கலாம்.  ஆனால் இது மீட்டிங்கில் கலந்து கொண்டு இருப்பவர்களுக்கு பயனளிக்கும்.

ஜியோவின் அடுத்த அதிரடி.. வந்துவிட்டது JioGamesCloud.. ஆன்லைனில் இலவசமாக விளையாடலாம்!

 இது குறித்து எலான் மஸ்க் கூறுகையில் "நீங்கள் நல்ல பங்களிப்பு அளிக்கவில்லை என்றால் மீட்டிங்கில் இருந்து வெளியேறுங்கள் அல்லது காலில் இருந்தால் கட் செய்துவிடுங்கள். இப்படி சொல்வது ஒன்றும் முரட்டுத்தனமான நடவடிக்கை அல்ல, மாறாக, நீங்கள் ஒன்றும் செய்யாமல் மீட்டிங்கில் இருந்துகொண்டு, மற்றவர்களின் நேரத்தையும் வீணாக்குவது தான் முரட்டுத்தனமானது" என்று அவர் கூறினார்.

ஒரு முக்கியமான வேலை முடிய வேண்டும் என்றால், நிறுவனம் வகுத்துள்ள படிநிலையைப் பின்பற்றத் தேவையில்லை. உடனே அந்த வேலையை மட்டும் முறையாக முடித்தால் போதும்.

நிறுவனத்தில் உள்ள முக்கியமான பிரச்சனையே துறைகளுக்கு இடையில் உள்ள தகவல்தொடர்பு தான். ஒருவர் ஒரு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றால், அவர் அவர் மற்றொரு துறையில் உள்ள பணியாளரைத் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. அவர் அவருக்கு மேல் உள்ளவரிடம் பேச  வேண்டியுள்ளது, அவர் அதற்கும் மேல் உள்ளவரிடம் பேச வேண்டியுள்ளது. இவ்வாறு ஒரு பிரச்சனையை முடிப்பதற்குள் பல பேரிடம் கேட்டு கேட்டு நேர விரயம் தான் ஏற்படுகிறது. எனவே, எவர் ஒருவர் பிரச்னையில் உள்ளாரோ, அவர் அதை சரிசெய்யும் பணியாளருடன் நேரடியாக பேசினாலே மொத்த உழைப்பும் நேரமும் மிஞ்சும்.  இவ்வாறு எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios