மணிக்கு 355 கி.மீ. வேகம்... சீறிப் பாயும் புது லம்போர்கினி கார் இந்தியாவில் அறிமுகம்..!

லம்போர்கினி அவென்டடார் LP780-4 அல்டிமே மாடல் கூப் மற்றும் ரோட்ஸ்டர் என அருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது.

 

Lamborghini Aventador Ultimae Launched In India

இத்தாலி நாட்டை சேர்ந்த முன்னணி சூப்பர் கார் உற்பத்தியாளரான லம்போர்கினி, இந்திய சந்தையில் அவென்டடார் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இது முழுக்க முழுக்க பெட்ரோல் வி12 என்ஜின் கொண்ட கடைசி லம்போர்கினி கார் ஆகும். இந்த மாடல் லம்போர்கினி அவென்டடார் அல்டிமே என அழைக்கப்படுகிறது. உலகம் முழுக்க இந்த கார் மொத்தத்தில் 600 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 

லம்போர்கினி அவென்டடார் LP780-4 அல்டிமே மாடல் கூப் மற்றும் ரோட்ஸ்டர் என அருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. இவை முறையே 350 மற்றும் 250 யூனிட்களே விற்பனைக்கு வர உள்ளன. புதிய லிமிடெட் எடிஷன் லம்போர்கினி அவென்டடார் அல்டிமே மாடல் அவெண்டடார் SVJ மற்றும் அவெண்டடார் S  மாடல்களின் இடையே நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

சக்திவாய்ந்த வி12 என்ஜின்:

புதிய லம்போர்கினி அவெண்டடார் LP780-4 அல்டிமே மாடலில் மிகவும் சக்திவாய்ந்த வி12 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 8500 ஆர்.பி.எம்.-இல் 770 ஹெச்.பி. பவர் மற்றும் 6750 ஆர்.பி.எம்.-இல் 720 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 355 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது. 

Lamborghini Aventador Ultimae Launched In India

லம்போர்கினி அவெண்டடார் அல்டிமே எடிஷன் மணக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டி விடும். மேலும் மணிக்கு 0 முதல் 200 கிலோமீட்டர் வேகத்தை 8.7 நொடிகளில் எட்டிவிடும். 

ஸ்டைலிங்:

புதிய லம்போர்கினி அவெண்டடார் அல்டிமே மாடலின் முற்றிலும் புது முன்புற பம்ப்பர், பிரமாண்ட சைடு ஸ்கர்ட்கள், ரியர் டிப்யுசர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஸ்டாண்டர்டு அவெண்டடார் S மாடலை  விட 25 கிலோ வரை எடை குறைவாக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கார் 20 இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் 21 இன்ச் வில்களை தேர்வு செய்யும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 

லம்போர்கின் அவெண்டடார் அல்டிமே மாடல் 18 ஸ்டாண்டர்டு நிறங்களில் கிடைக்கிறது. இவை எதுவும் பிடிக்காத பட்சத்தில் சற்று அதிக செலவு செய்தால் சுமார் 300 வித்தியாசமான நிறங்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios