Kia EV : 14 EV கார்கள் - தொலைநோக்கு பார்வையில் சூப்பர் திட்டங்களை தீட்டும் கியா!

Kia EV : கியா நிறுவனம் 207 ஆண்டிற்குள் 14 முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Kia plans 14 pure electric models by 2027

கியா நிறுவனம் 2030 வாக்கில் உலகம் முழுக்க சுமார் 12 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையும் நோக்கில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் கியா ஈடுபட்டு வருகிறது. எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி ஆட்டனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் மற்றும் புதிய டிஜிட்டல் வருவாய் வழிமுறைகளை அறிமுகம் செய்யவும் கியா திட்டமிட்டுள்ளது.

பிளான் எஸ் எலெக்ட்ரிஃபிகேஷன் திட்டத்தின் அங்கமாக இதுபற்றிய அறிவிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கியா வெளியிட்டு இருந்தது. சர்வதேச அளவில் மாசில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் நிறுவனமாக உயர வேணஅடும் எனும் இலக்கை நோக்கி கியா பயணித்து வருகிறது. 

2030 வாக்கில் உலகளவில் 12 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வது, ஒட்டுமொத்தமாக 40 லட்சம் வாகனங்களை விற்பனை செய்வது, அட்வான்ஸ்டு கனெக்டிவிட்டி மற்றும் ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பத்தை அனைத்து மாடல்களிலும் வழங்குவது, மூன்றாம் தரப்பு வாடகை கார் ஆப்பரேட்டர்களுக்கு ஏற்ற வகையிலான தயாரிப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக மாறுவது என நான்கு இலக்குகளை கியா அடிப்படையாக கொண்டிருக்கிறது. 

Kia plans 14 pure electric models by 2027

அந்த வகையில் 2027 வாக்கில் 14 முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களை கியா அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் இரண்டு பிக்கப் அப் டிரக் மாடல்களும், ஒரு எண்ட்ரி லெவல் BEV மாடலும் அடங்கும். மேலும் அனைத்து மாடல்களும் கியா  EV6 போன்றே GT பேட்ஜ் செய்யப்பட்ட செயல்திறன் வழங்க கியா முடிவு செய்துள்ளது. எனினும், இவற்றின் வடிவமைப்பு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். 

கியா நிறுவனம் தனது EV9 எஸ்.யு.வி. மாடலின் ப்ரோடக்‌ஷன் வேரியண்டை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் முழு சார்ஜ் செய்தால் இந்த கார் 541 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த மாடலில் பல்வேறு முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

இந்திய சந்தையில் கியா நிறுவனம் நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றில் புதுவரவு மாடலாக கரென்ஸ் எம்.பி.வி. அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கியா நிறுவனம் இந்திய சந்தையில் முழைமையான எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் கியா EV6 இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios