528 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் கியா EV6... இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
சர்வதேச சந்தையில் கியா EV6 மாடல் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார், கியா EV6 இந்திய சந்தையில் ஜூன் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய கியா EV6 மாடலுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (மே 26) துவங்க இருக்கிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து இந்த மாடலின் வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய கியா EV6 கம்ப்லீட்லி பில்ட் யூனிட்களாக இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன. முதற்கட்டமாக நூறு யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இவை இந்த ஆண்டு முழுக்க விற்பனை செய்யப்பட உள்ளன. கியா EV6 மாடல் இந்திய சந்தையில் RWD (ரியல் வீல் டிரைவ்) மற்றும் AWD (ஆல் வீல் டிரைவ்) என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
பேட்டரி:
கியா EV6 மாடல் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இதே கார் அதிக யூனிட்கள் மற்றும் வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது சர்வதேச சந்தையில் கியா EV6 மாடல் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் போது கியா EV6 58 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட மாட்டாது.
ரேன்ஜ்:
பெரிய பேட்டரி கொண்ட RWD வேரியண்ட் அதிக ரேன்ஜ் வழங்குகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமாட்டர்கள் வரை செல்லும் என WLTP சான்று பெற்று இருக்கிறது. இதன் AWD வேரியண்ட் 425 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கியா EV6 மாடல் அசத்தல் தோற்றம் மற்றும் அதிநவீன டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் கில்ஸ் மற்றும் புது தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய சந்தையில் கியா EV6 மாடலுக்கு போட்டியாக விளங்கும் மாடல்களின் விலை ரூ. 1 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த நிலை மாறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
வால்வோ XC40 ரிசார்ஜ் மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 போன்ற மாடல்கள் வரும் மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த மாடல்களின் விலை கியா EV6 மாடலுக்கு இணையாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.