ஆக்ஷனில் இறங்கிய ஜியோ....! அதிரடியாக இணைப்புகள் துண்டிப்பு...

jio started to disconnect the service a
jio started-to-disconnect-the-service-a


ரிலையன்ஸ் ஜியோ கடந்த 6 மாத காலமாக இலவச டேட்டா மற்றும் கால்ஸ் சேவையை வழங்கியது. இந்நிலையில்,  கடந்த மார்ச்  மாதத்துடன்  இலவச  சேவையை  முடித்துக் கொண்டு  கட்டண சேவையை  தொடங்க  ஜியோ முடிவு செய்தது 

முன்னதாக ஜியோ வெல்கம் ஆபர், நியூ இயர் ஆபர்  என  பல  சலுகையை  வாரி வழங்கியது ஜியோ. இதற்கிடையில்,   ஜியோ  ப்ரைம்  திட்டத்தை  பற்றியும்   அறிவிப்பு வெளியானது . அதாவது   ஜியோ ப்ரைம்  வாடிக்கையாளர்கள்  என்றால்,     ரூ 99 க்கு ரீசார்  செய்வதன்  மூலம், மேலும்  பல  சலுகைகளை  பெற முடியும் .

குறிப்பாக  மார்ச் 31 ஆம்  தேதிக்குள்  99 ரூபாக்கு ரீசார்ஜ் செய்து, பிரைம்  வாடிக்கையாளர்களாக மாறலாம் என  ஜியோ அறிவித்து இருந்தது. இந்நிலையில், ஜியோ அதற்கான   கால அவகாசத்தையும்  ஏப்ரல் 15 வரை  நீட்டித்தது.

இந்நிலையில், மற்ற  தொலைதொடர்பு  நிறுவனங்கள், ஜியோ வை பற்றி  ட்ராயிடம் முறையிடவே, இலவச  சேவையை  15 ஆம் தேதி வரை  வழங்குவதை  கைவிட்டது ஜியோ.

ஆனால், அதற்கு மாறாக , தன் தனா  தன் என்ற பெயரில் சிறப்பு சலுகை ஒன்றையும்  அறிமுகம் செய்தது ஜியோ. அதன் படி, ஜியோ ப்ரைமில் இணைந்தவர்கள், ரூ.309க்கு ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவை பயன்படுத்தலாம்  என  தெரிவித்து இருந்தது .  

இதே போன்று, ஜியோ ப்ரைமில் இணையாதவர்களும் கூடுதலாக ரூ.99 செலுத்தி மொத்தம் ரூ.408க்கு இந்த ஆபரை பெறலாம் எனவும்  தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில், இலவச சேவைக்குப் பின்  இதுவரை  குறைந்தபட்சம் ஒரு ரீசார்ஜ் கூட செய்யாத வாடிக்கையாளர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது . அதாவது  குறைந்த பட்ச ரீசார்ஜ் தொகையான  99  ரூபாய்க்கு  கூட  ரீசார்ஜ்  செய்யாதவர்களின்  இணைப்பை  ஜியோ  அதிரடியாக   துண்டித்து  வருகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios