6ஜி ஆய்வை துவங்கிய ஜியோ - பல்கலைக்கழகத்துடன் கூட்டணி அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எஸ்டோனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 6ஜி தொழில்நுட்பத்தில் ஆய்வு பணிகளை துவங்கியது.

Jio Signs Agreement With Estonia's University of Oulu for Collaboration on 6G Technology

எஸ்டோனியாவில் உள்ள ஜியோ மற்றும் ஒலுலு பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் படி 6ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் வியாபாரத்தை கட்டமைக்க ஜியோ மற்றும் ஒலுலு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளன.

இந்த கூட்டணி  மூலம் ஜியோவின் 5ஜி திறனை நீட்டிப்பது மற்றும் 6ஜி தொழில்நுட்பத்தின் பயன்களை பற்றி ஆய்வு செய்ய எஸ்டோனியாவை சேர்ந்த பல்கலைக்கழகம் உதவுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் தாய் நிறுவனமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இருக்கிறது.

"உலகின் முதல் 6ஜி ஆய்வு திட்டத்தின் முன்னோடியாக இருக்கும் ஒலுலு பல்கலைக்கழகம் 6ஜி தொழில்நுட்பத்திற்கு வழிவகை செய்யும் வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறைகளில் கவனம் செலுத்துகிறது." 

"ஜியோ எஸ்டோனியா மற்றும் ரிலையன்ஸ் குழுமத்துடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வமாக இருக்கிறோம். இந்த கூட்டணி மூலம் பயனர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் எண்ட்-டு-எண்ட் எதிர்கால வயர்லெஸ் தீர்வு காண ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது," என ஒலுலு பல்கலைக்கழத்தின் இயக்குனர் மற்றும் 6ஜி ஃபிளாக்‌ஷிப் பேராசிரியர் மேட்டி லட்வா-ஹோ தெரிவித்தார்.  

Jio Signs Agreement With Estonia's University of Oulu for Collaboration on 6G Technology

5ஜி-யின் மேல் 6ஜி பில்டுகள் டிஜிடைசேஷனை நீட்டித்து பிரத்யேக திறன் வழங்குகின்றன. 5ஜி மற்றும் 6ஜி இணைந்து பயனர் மற்றும் தொழல் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என ஒலுலு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

இருதரப்பு அனுபவங்களை ஒருங்கிணைத்து புது வியாபாரத்தை துவங்க இந்த கூட்டணி வழிவகை செய்யும். இதன் மூலம் பாதுகாப்பு துறை, ஆட்டோமோடிவ், தொழில்நுட்ப இயந்திரங்கள், நுகர்வோர் பொருட்கள், சிறப்பான உற்பத்தி, தலைசிறந்த ஸ்மார்ட் சாதனங்கள், தானியங்கி டிராஃபிக் செட்டிங் என பல பிரிவுகளில் 6ஜி சார்ந்த சாதனங்களை உருவாக்க இந்த கூட்டணி உதவும்.

"இந்தியாவில் 40 கோடி பயனர்களை ஜியோ கொண்டிருக்கிறது. அவர்களின் அனுபவம் மிகப்பெரிய அளவிலான தரவுகளை பரிமாற்றம் செய்வது சவாலாக மாறி வருவதை வெளிப்படுத்துகிறது. ஒலுலு பல்கலைக்கழகத்துடனான கூட்டணி மூலம், தொடர் வளர்ச்சியை பதிவு செய்வதோடு, எதிர்காலத்திற்கான உலகை கட்டமைக்க முடியும்," என ஜியோ எஸ்டோனியா தலைமை செயல் அதிகாரி டாவி கொட்கா தெரிவித்தார். 

"6ஜி ஆய்வு மற்றும் திறன்களில் முதலீடு செய்வதன் மூலம் ஜியோ லேப்ஸ்-இன் 5ஜி வளர்ச்சிக்கு உதவுவதோடு, 6ஜி தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டு  வரும்," என ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஆயுஷ் பட்னாகர் தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios