ஜியோ தான் கரெக்ட்டு ..!!! ட்ராயை முறைக்கும் ஏர்டெல் ......!!!
ஜியோ :
ஜியோ என்றாலே போதும். சூப்பர் பா... எனக்கு ஒரு சிம் கிடைக்குமா என அனைவராலும் வாய் திறந்து கேட்க வைத்தது ஜியோ என்றால் அது ஆணித்தரமான உண்மைதான்.
எத்தனை சலுகைகள் :
சலுகைகளை வாரி வழங்குவதில் ஜியோ வை யாராலும் மிஞ்ச முடியவில்லை என்று கூட கூற முடியும். இதன் விளைவாக , மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள், ஜியோ வுடன் போட்டி போட முடியாமல் தவித்து வந்த நிலையில், தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையிட , அவர்களும் ஜியோ வுக்கே ஆதரவு தெரிவிக்க தற்போது கடும் கொந்தளிப்புடன் உள்ளார்கள் மற்ற நிறுவனங்கள்
ஜியோவிற்கு எதிராக மற்ற நிறுவனங்கள் :
ஜியோ அளித்த வெல்கம் ஆஃபர் மற்றும் நியூ இயர் ஆஃபர்கள் முறைகேடானது என ஏர்டெல்,வோடபோன் உள்ளிட்ட மற்ற முன்னனி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டிராயிடம் புகார் அளித்தது.இந்த புகாரை விசாரித்த டிராய் ஜியோவின் 2 ஆஃபர்களையும் ஆய்வு செய்து தற்போது கருத்து தெரிவித்துள்ளது.
ஜியோவுக்கு ஆதரவு :
ஒரு புதிய தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாகும் போது அறிமுகத்திட்டம் 90 நாட்கள் வழங்க அனுமதி உண்டு என்றும், அதனால் மேலும் ஜியோ ஆஃபரில் எதுவும் முறைகேடு இல்லை, விதிமீறலும் இல்லை என ஜியோவுக்கு சாதகமாக கருத்து தெரிவித்துள்ளது.
கடும் கடுப்பு :
இதனால் ஏர்டெல் உள்ளிட்ட மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள், ட்ராய் மீது கடும் கொந்தளிப்பில் உள்ளது.