Asianet News TamilAsianet News Tamil

முழுவீச்சில் Jio 5G சேவை விரிவாக்கம்.. சுமார் 1 லட்சம் 5ஜி டவர்கள் நிறுவல்!

இந்தியாவில் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை முழுவீச்சில் விரிவுபடுத்தி வருகிறது, அதன் ஒரு பகுதியாக சுமார் 1 லட்சம் 5ஜி டவர்களை நிறுவுவதாக செய்திகள் வந்துள்ளன.

Jio Installs 1 Lakh Towers to Expedite 5G Rollout in India, says DOT report
Author
First Published Mar 25, 2023, 11:41 PM IST

இந்தியாவைப் பொறுத்தவரையில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான இணைய பயனர்கள் உள்ளனர், சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் இரண்டாவது பெரிய ஆன்லைன் சந்தையாக உள்ளது. இப்படியான சூழலில் இந்தியாவில் 5ஜி சேவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. 

தொடக்கத்தில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை சில நகரங்களில் கொண்டு வந்தாலும், அடுத்தடுத்த வாரங்களில் ஜியோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியது. மேலும், ஏர்டெலுடன் ஒப்பிடுகையில், ஜியோ நிறுவனம் 5ஜிக்கு என பிரத்யேக டவர்களை வைத்துள்ளதால், ஜியோவின் 5ஜி வேகம் அதிகமாகவே உள்ளது. 

இந்த நிலையில், நாடு முழுவதும் 5ஜி சேவையை விரைவில் விரிவபடுத்துவதற்காக ஜியோ நிறுவனம் சுமார் 1 லட்சம் 5ஜி டவர்களை நிறுவுவதாக செய்திகள் வந்தள்ளன. இதுதொடர்பாக அண்மையில் தொலைத்தொடர்புத் துறையின் (DoT) தேசிய EMF போர்ட்டலின் தினசரி நிலை அறிக்கையில் சில விவரங்கள் வெளியானது. அதன்படி, ஏர்டெல் நிறுவனம் 22,219 BTS ஸ்டேஷன்களையும், ஜியோ நிறுவனம் 99,897 BTS ஸ்டேஷன்களையும் நிறுவியுள்ளன.  ஒவ்வொரு BTS நிலையத்திற்கும், ஜியோ 3 செல் தளங்களையும், ஏர்டெல் 2 தளங்களையும் கொண்டுள்ளது.  

அதிக டவர்கள், அதிக செல் தளங்கள் என்பது வேகமான இணைய வேகத்தைக் குறிக்கின்றன. இன்டர்நெட் வேகம் குறித்த விவரங்களை வழங்கும் Ookla தளத்தில் கடந்த பிப்ரவரி 28 வெளியான அறிக்கையின்படி, ஏர்டெல் நிறுவனம் 268 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவையை வழங்குகிறது. ஆனால், ஜியோ நிறுவனம் சுமார் இருமடங்கு அதிகமாக, அதாவது, 506 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவையை வழங்குவதாக தெரிகிறது.

Microsoft Bing தளத்தில் புதிய வசதி.. இனி ஒரே இடத்தில்..

கடந்த மாதம், ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான ஆகாஷ் அம்பானி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பட்ஜெட் வெபினாரில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஜியோ நிறுவனம் உலகின் அதிவேக 5G அறிமுகம் செய்யும் என்று குறிப்பிட்டிருந்தார். 

ஜியோ என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமாகும், இந்த நிறுவனம் முகேஷ் அம்பானியால் நடத்தப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் தனது அதிவேக 5ஜி சேவை நாட்டில் உள்ள 500 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வந்துள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios