மார்ச் 31,2018 வரை ஜியோ சலுகை நீட்டிப்பு...!அதிரடி சலுகையால் இன்பஅதிர்ச்சி கொடுத்தார் முகேஷ்..!
மார்ச் 31,2018 வரை ஜியோ சலுகை நீட்டிப்பு...!அதிரடி சலுகையால் இன்பஅதிர்ச்சி கொடுத்தார் முகேஷ்..!
ரிலையன்ஸ் ஜியோ பல அதிரடி சலுகைகளை அறிவித்து, மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளது. ப்ரீ டேட்டா சலுகையால், பெரும்பாலன மக்கள் தற்போது ஜியோ சிம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்கள் 1௦௦ மில்லியனை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1௦௦ மில்லியன் வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ள ஜியோ, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக, பல புதிய சலுகைகளை முகேஷ் அம்பானி அறிவித்தார்.
பழைய வாடிக்கையாளர்கள் :
தற்போது ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ப்ரீ டேட்டா சர்வீஸ், வரும் மார்ச் மாதம் முடிவடையும் தருவாயில், தொடர்ந்து ப்ரீ சர்வீசை மார்ச் 31, 2018 வரை பயன்படுத்த சலுகையை நீட்டித்துள்ளார் முகேஷ் அம்பானி
99 ரூபாய்க்கு ரீசார்ஜ்
ப்ரீ டேட்டா சர்வீஸ் அடுத்த மாதம் முடியும் தருவாயில், 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், அடுத்த 12 மாதங்களுக்கு (march 31, 2018 ) அன்லிமிடட் ப்ரீ சர்வீஸ் பெறலாம் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார் .அதற்கு அடுத்த படியாக தொடர்ந்து ஜியோவின் "அன்லிமிடட் ப்ரீ சர்வீஸ் " சலுகையை பெற வேண்டும் என்றால், 99 ரூபாயில் ரீ சார்ஜ் செய்வதுடன் ,மாதம் Rs 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார் .