Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் மீண்டுமா? டெலிகாம் நிறுவனங்களின் தீபாவளி பரிசு.. இணையத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

அடுத்த ஆண்டு இறுதியில் மூன்று நிறுவனங்களும் ஒரு வாடிக்கையாளரிடம்  இருந்து பெறும் வருவாய் பத்து சதவீதம் வரை அதிகரிக்கும்.

Jio Airtel Vi likely to hike tariff by Diwali 2022 Report
Author
India, First Published May 24, 2022, 5:38 PM IST

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களான ரிலைன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) இந்தியாவில் தனது சேவை கட்டணங்களை மீண்டும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலக்கட்டத்தில் தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை (ARPU) அதிகப்படுத்தும்  முயற்சியாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் தங்களது சேவைகளின் விலையை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விலை உயர்வு அமலுக்கு வரும் நிலையிலும், மூன்று நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து சுமார் 35 முதல் 40 மில்லியன் பயனர்களை கூடுதலாக சேர்க்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. 

Jio Airtel Vi likely to hike tariff by Diwali 2022 Report

இவர்களில் பெரும்பாலானோர் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஊரக பகுதிகளில் ஏற்படும் வளர்ச்சி காரணமாக டெலிகாம் நிறுவனங்களுக்கு இவ்வளவு வாடிக்கையாளர்கள் புதிதாக கிடைக்கலாம். இந்த ஆண்டு 10 முதல் 12 சதவீத விலை உயர்வை கொண்டு அடுத்த ஆண்டு இறுதியில் மூன்று நிறுவனங்களும் ஒரு வாடிக்கையாளரிடம்  இருந்து பெறும் வருவாய் (ARPU) பத்து சதவீதம் வரை அதிகரிக்கும் என தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இரண்டாவது முறை:

இது ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ARPU-வை ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் முறையே ரூ. 200, ரூ. 185 மற்றும் ரூ. 135 ஆக அதிகரிக்க முடியும். முன்னதாக பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் கோபால் விட்டல், இந்த ஆண்டு இரண்டு முறை டெலிகாம் சேவை கட்டணங்கள் உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தார். எனினும், வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வராது என அவர் தெரிவித்து இருந்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios