ஏர்டெல்லைத் தொடர்ந்து ஜியோவிலும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், இரண்டிலும் உள்ள 5ஜியின் வேகம் குறித்து இங்கு காணலாம்.

இந்தியாவில் கடந்த 1 ஆம் தேதி முதல் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் ஏர்டெல் தரப்பில் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி சேவை அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று அக்டோபர் 5 ஆம் தேதி ஜியோவிலும் 5ஜி பீட்டா சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஏர்டெல்லைப் பொறுத்தவரையில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், நாக்பூர் மற்றும் சிலிகுரி ஆகிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதே போல் ஜியோவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நகரங்களில் பீட்டா சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏர்டெலில் 5ஜியின் வேகம் நகரங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. டெல்லியில் 5ஜியின் வேகம் 1030 Mbps அளவில் உள்ளது. அதாவது 128 MB அளவிலான ஒரு ஃபைலை நொடியில் டவுன்லோடு செய்துவிடலாம். இதே போல் குருகிராமில் 837 Mbps வேகமும், சென்னையில் கண்ணப்ப நகர் உள்ளிட்ட சில இடங்களில் 5ஜியின் வேகம் 184Mbps ஆகவும், இன்னும் சில இடங்களில் வெறும் 40Mbps அளவிலும் மட்டுமே உள்ளது. மொத்தத்தில் ஏர்டெல்லைப் பொறுத்தவரையில் 5ஜியின் வேகம் நிலையானதாக இல்லை. அந்தந்த நகரங்கள், பகுதிக்கு ஏற்றவாறு 40 முதல் 1000Mbps வரையில் உள்ளது. 

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…


ஜியோவில் 5ஜி சேவையை சோதனை முயற்சியாக மட்டுமே கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1Gbps வரையில் 5ஜியின் வேகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ஜியோ 5ஜியின் வேகம் எந்த அளவில் இருக்கும் என்பது தெரியவரும். மேலும், தீபாவளிக்குள் முழுமையான 5ஜி சேவை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி அறிமுகத்தின் போது இணையத்தின் வேகம் பன்மடங்கு இருக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், சில நகரங்களில் 5ஜியின் வேகம் 4ஜியைக் காட்டிலும் குறைவாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.