ஜியோ மேலும் மேலும் அதிரடி சலுகை...! கூடுதலாக 5 ஜிபி “ப்ரீ”...இன்டர்நெட் வேகம் குறையாது
ஜியோ மேலும் மேலும் அதிரடி சலுகை...! கூடுதலாக 5 ஜிபி “ப்ரீ”...இன்டர்நெட் வேகம் குறையாது
ஜியோவின் அட்டகாச சலுகையானது இம்மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஜியோவின் சலுகையை தொடர்ந்து பெற, ரூபாய் 99 கு ரீசார்ஜ் செய்து , புதுப்பித்து கொள்ளலாம் . மேலும் டேட்டா வசதியை பெற வேண்டுமென்றால், மாதந்தோறும் ரூ 3௦3 , ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் இந்த சலுகை மட்டுமின்றி கூடுதலாக , 5 ஜி பி வழங்கப் படும் என ஜியோ அதிரடியாக தெரிவித்துள்ளது.
விளக்கம்
ரூ.303க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்குவதாக ஜியோ மேலும் அதிரடி சலுகையை அறிவித்தது. மேலும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் டேட்டா மூலம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்ற அளவை கடந்த பின் இண்டர்நெட் வேகம் குறையாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய மார்ச் 31, 2017 கடைசி தேதி என்பது கூடுதல் தகவல்
இதே போல் ரூ.499 மற்றும் அதற்கும் மேல் ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதலாக 10 ஜிபி டேட்டா வழங்க உள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.
இதே போன்று நாம் தேர்வு செய்யும் திட்டத்திற்கு ஏற்ப ஜிபி கூடுதலாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது