அசத்தல் அப்டேட்ஸ்... சூப்பர் லுக்கில் ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் அறிமுகம்..!
ஜீப் காம்பஸ் 2020 பிரீ-பேஸ்லிப்ட் மாடலின் நைட் ஈகிள் எடிஷை ஜீப் நிறுவனம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜீப் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக ஜீப் காம்பஸ் 2020 பிரீ-பேஸ்லிப்ட் மாடலின் நைட் ஈகிள் எடிஷை ஜீப் நிறுவனம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அம்சங்கள்:
ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷனில் கிளாஸ் பிளாக் கிரில், மற்றும் கிரில் ரிங்குகள் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 18 இன்ச் பிளாக் அலாய் வீல்கள், பிளாக் ரூஃப் ரெயில்கள், கிளாஸ் பிளாக் விங் மிரர்கள், ஃபாக் லேம்ப் பெசல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
காரின் உள்புறம் பியானோ பிளாக் டிரீட்மெண்ட் செய்யப்பட்டு பிளாக் வினைல் சீட்கள், டங்ஸ்டன் ஸ்டிட்ச், டோர் ட்ரிம் மற்றும் IP உள்ளிட்டவைகளில் பிளாக் வினைல் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது.
மேலும் 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆல் ஸ்பீடு டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், எலெக்டிரானிக் பார்கிங் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
என்ஜின்:
ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 2 லிட்டர், 4 சிலிண்டர் மல்டிஜெட் பெட்ரோல் யூனிட் உடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.4 லிட்டர் மல்டி-லேயர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஜீப் காம்பஸ் விலை விவரங்கள்:
ஜீப் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது காம்பஸ் மாடல் விலையை ரூ. 25 ஆயிரம் வரை அதிகரித்தது. அதன்படி காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 18 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 30 லட்சத்து 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.