19 ரேன்ஜ் ரோவர் கார்களை ரிகால் செய்யும் லேண்ட் ரோவர்... என்ன காரணம் தெரியுமா?

இந்த கோளாறை ஏப்ரல் மாத வாக்கில் கண்டறிந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஆலையில் இதுபற்றிய விசாரணையை நடத்தியது. 

Jaguar Land Rover recalls 19 range rover SUV units in US

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2022 ரேன்ஜ் ரோவர் மாடல்களில் உள்ள முன்புற கிராஷ் சென்சார்களில் கோளாறு இருப்பதை கண்டறிந்து உள்ளது. இதனை சரி செய்யாமல் போகும் பட்சத்தில் மிக மோசமான பின் விளைவுகள் ஏற்படலாம் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கருதுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா சந்தையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆகிய தேதிகளுக்குள் விற்பனை செய்யப்பட்ட ரேன்ஜ் ரோவர் எஸ்.யு.வி. மாடல்களை ரிகால் செய்ய முடிவு செய்து உள்ளது. 

அதன்படி இந்த காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களில் 100 சதவீதம் கோளாறு உள்ளன. இவை காரின் முன்புற கிராஷ் சென்சாரை செயல் இழக்க செய்யும் அபாயம் உள்ளது. இதனால் காரின் ஆக்டிவ் ரெசிஸ்டண்ட் சிஸ்டம்கள் சரியாக இயங்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. 

பெரிய ஆபத்து:

முன்புற கிராஷ் சென்சார்கள் இயங்காமல் போனால், காரணம் இன்றி ஏர்பேக் சரியாக செயல்படாமல் போகலாம். இது ஓட்டுனர் மட்டும் இன்றி காரில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் கடும் காயங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதோடு காரை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

Jaguar Land Rover recalls 19 range rover SUV units in US

இந்த கோளாறை ஏப்ரல் மாத வாக்கில் கண்டறிந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஆலையில் இதுபற்றிய விசாரணையை நடத்தியது. அதன் பின் இந்த மாதம் தான்,  கோளாறு பாதுகாப்பு விஷயத்தில் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை உறுதிப்படுத்தியது. அந்த வரிசையில், தற்போது கார்களை ரிகால் செய்யும் நடவடிக்கையை ஜாகுவார் லேண்ட் ரோவர் மேற்கொண்டு வருகிறது.

ரி-கால் நடவடிக்கை:

லேண்ட் ரோவர் கார்களில் இந்த கோளாறு காரணமாக இதுவரை எந்த விபத்துக்களும் ஏற்பட்டதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. படிப்படியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இந்த கோளாறு பற்றி எடுத்துக் கூறி ஜூலை 8 ஆம் தேதி முதல் ரிகால் செய்ய இருக்கிறது. பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்துவோர், தங்களது லேண்ட் ரோவர் காரை சர்வீஸ் மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 

சர்வீஸ் மையத்தில் உள்ள டெக்னீஷியன் காரின் முன்புற கிராஷ் சென்சாரை சரி செய்து, டார்க் அளவை மாற்றி அமைப்பார். இதற்கான கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என ஜாகுவார் லேண்ட் ரோவர் தெரிவித்து இருக்கிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios