OnePlus 11 -க்குப் போட்டியாக களமிறங்கும் iQOO 11

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக iQOO 11 தயாராகி வருகிறது. 
 

iQOO 11 launching in Jan 2023 will be priced aggressively, compete with OnePlus 11 check details here

இந்தியாவில் வரும் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் OnePlus, iQOO, Redmi மற்றும் பல பிராண்டுகளின் புதிய ஃபோன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதில் குறிப்பாக OnePlus 11 5G ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுக்குப் போட்டியாக iQOO 11 ஸ்மார்ட்போன் தயாராகி, அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த வார தொடக்கத்தில், OnePlus 11 விலை விவரங்கள் வெளியாகின. அதேபோல், தற்போது iQOO 11 ஸ்மார்ட்போனின் விலையும் இருப்பதாக கூறப்படுகிறது. முதலாவதாக, OnePlus 11 பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.. ஆனால், தற்பபோது ஐக்கூயூ சற்று முன்னதாகவே, அதாவது ஜனவரி மாதம் அறிமுகமாகிறது. 

இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 55,000 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ​​iQOO 11 இன் விலை 60,000 ரூபாய் என்றால், வரவிருக்கும் OnePlus 11 ஸ்மார்ட்போனும் இதே விலை வரம்பில் வெளியிடப்படும். 

iQOO 11 இன் விலையை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அது ஏற்கனவே சில முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, iQOO 11 ஸ்மார்ட்போனானது அமேசான் மற்றும் iQOO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கும். ஆல்பா மற்றும் லெஜண்ட் என இரண்டு வண்ண நிறங்களில் வரும். ​​iQOO 11 ஸ்மார்ட்போனைத் தவிர, iQOO 11 Pro 5G எனும் ப்ரோ மாடலும் அறிமுகமாக உள்ளது.

Airtel 5G மேலும் 3 நகரங்களில் விரிவாக்கம்! உங்கள் பகுதியில் எப்போது Airtel 5G கிடைக்கும்?

iQOO 11 சிறப்பம்சங்கள்:

iQOO 11 ஏற்கனவே சீனாவில் கிடைக்கிறது, அதே மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சீன மற்றும் இந்திய மாடல்களின் அம்சங்கள் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். சீனாவில் வெளியான ஸ்மார்ட்போனில், 1440x3200 பிக்சல்கள், HDR10+, 144Hz ரெப்ரெஷ் ரேட், 6.78-இன்ச் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன. ஆக்டா-கோர் 4nm ஸ்னாப்டிராகன் 8 2 SoC பிராசசர், 16GB வரை LPDDR5 ரேம், UFS4.0 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் இருந்தது.  தற்போது இந்த அம்சம்ங்கள் அனைத்தும் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஐக்கூ 11 ஸ்மார்ட்போனிலும் இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios