Asianet News TamilAsianet News Tamil

ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் ஐபோன் விற்பனை செய்யும் ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE மாடல் இந்திய விலை விரைவில் அதிரடியாக குறைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

iPhone SE 2020 to get priced under rs 20000
Author
Tamil Nadu, First Published Mar 1, 2022, 5:05 PM IST

இந்தியாவில் ஐபோன் SE 2020 மாடலின் விலை பெருமளவு குறைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் 5ஜி ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், புதிய ஐபோன் SE அறிமுகமானாலும், ஐபோன் SE 2020 மாடலை தொடர்ந்து விற்பனை செய்ய ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதுவும் ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன் SE 2020 மாடல் விலையை அதிகளவு குறைத்து விற்பனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐபோன் SE 2020 மாடலின் விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படும் ஆப்பிள் நிகழ்வுக்கு பின் ஐபோன் SE 2020 மாடல் விலை குறைக்கப்படும் என்றும் இதன் புதிய விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

iPhone SE 2020 to get priced under rs 20000

ஆப்பிள் சாதனங்களை தற்போது இருப்பதை விட மேலும் அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவே ஆப்பிள் இவ்வாறு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஐபோன் SE 2020 மாடலின் விலை ரூ. 43 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த மாடல் ரூ. 30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

முன்னதாக ஆன்லைன் தளங்களில் நடைபெறும் சிறப்பு விற்பனைகளில் ஐபோன் SE 2020 மாடல் குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரம் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போதைய ஐபோன் SE மாடலை கொண்டு பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை எதிர்கொள்ள ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

புதிய ஐபோன் SE 3 மாடலில் மேம்பட்ட ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 4.7 இன்ச் LCD டிஸ்ப்ளே, ஒற்றை பிரைமரி கேமரா, IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, தடிமனான பெசல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் இது தற்போதைய ஐபோன் SE 2020 மாடலை போன்றே காட்சியளிக்கும் என்றும்  கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios